3 நாட்கள் இதயத்துடிப்பை நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து சாதனை!!!

பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள்!!! 💥 சீனாவில் உள்ள பியூஜியன் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். 💥 அங்கு அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் அவர் உடல் நிலையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. 💥 இறுதியில் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து, பின் மீண்டும் ஒட்ட வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர். இதற்காக அவருக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன.💥 அறுவை சிகிச்சையின்போது […]

Continue Reading

நவீன மென்பொருள் பயன்பாடு அரசு அலுவலகங்களில் அறிமுகம்!!!!

நவீன மென்பொருள் அரசு அலுவலகங்களில் அறிமுகம்!!! 💥 ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் பயன்பாட்டு திட்டம் பொது மக்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை, சிரமமின்றி செலுத்த, இந்த திட்டம் பெரிதும் உதவும். 💥 இத்திட்டத்தில், ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகளும், மின்னணு பதிவேடுகளாக மாற்றப்படும். 💥 இந்த மென்பொருளை பயன்படுத்துவதால், அரசின் வரவு செலவுகளை உடனடியாகவும், இதர விபரங்களை எளிமையாகவும் பெற முடியும்; அரசின் நிர்வாகம் மேம்படும்.💥 […]

Continue Reading

உலகின் உயரமான சிவலிங்கம்!!!

உலகின் உயரமான சிவலிங்கம் குமரியில் சாதனை!! 💥 கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள செங்கல் மகேஸ்வரம் பகுதியில் சிவபார்வதி திருக்கோயில் உள்ளது. 💥 இந்த கோயில் வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 💥 இந்நிலையில் சிவலிங்கத்தை ஆய்வு செய்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தார் உரிய சான்றிதழை வழங்கினர். இதையடுத்து இந்த சிலையானது […]

Continue Reading

புதிய கிரகம் கண்டுபிடிப்பு!!!!

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு!!! 💥 அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் புதிய கிரகங்களை கண்டு பிடிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது. 💥 இந்த டி.இ.எஸ்.எஸ். என்ற செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. இது மிக சிறிய கிரகமாகும். பூமியை விட 3 மடங்கு பெரியதாக உள்ளது. இந்த கிரகத்தில் பாறைகள் உள்ளன. 💥இக்கிரகம் […]

Continue Reading

ஒரே மாணவிக்காக இயங்கும் அரசுப்பள்ளி!!!

ஒரு மாணவிக்காக இயங்கும் தமிழக அரசுப்பள்ளி! 💥கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய ஜோகிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தற்போது ஒரே ஒரு மாணவியுடன் மட்டுமே இயங்கி வருகிறது. 💥கடந்த 1956ம் ஆண்டில் தொடங்கப்பட்டது இந்தப்பள்ளி.ஜோகிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை குழந்தைகளின் படிப்புக்காக கைக்கொடுத்தது ஜோகிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிதான். 💥 காலம் செல்லச்செல்ல, ஆங்கில மோகம் தனியார் பள்ளிகள் மீது ஈர்ப்பை அதிகரிக்க, கழிப்பறை கூட இல்லாத அரசுப்பள்ளிகளை மக்களே […]

Continue Reading

சென்னை காவல் துறைக்கு ரோபோ போலீஸ் அறிமுகம்!!!

சென்னை காவல் துறையில் புதிய ரோபோ போலீஸ் அறிமுகம் 💥 சென்னை காவல் துறைக்கு புத்தாண்டு வரவாக ‘ரோபோ’ போலீஸ் அறிமுகமாகி உள்ளது. 💥அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சேர்ந்து இந்த ‘ரோபோ’ போலீசை உருவாக்கியுள்ளனர். 💥 சென்னை மாநகர காவல் துறையில் ரோபோக்களை பயன்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. 💥 காவல் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள ரோபோவை, அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில், பார்வையிட்டனர். 💥 போக்குவரத்து, குற்றப்பிரிவு, சட்டம் […]

Continue Reading

33வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி!!!

தமிழகத்தின் 33வது மாவட்டம் கள்ளக்குறிச்சி!!! 💥 தமிழகத்தின் 33-வது மாவட்டமாக விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 💥 இதற்கு முன்னர் வரையில் கள்ளக்குறிச்சி வட்டம் (தாலுகா) எனும் அங்கீகாரம் பெற்றிருந்தது. 💥 இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலுரை ஆற்றினார். 💥 அப்போது சட்டத்துறை அமைச்சர் […]

Continue Reading

பள்ளிக்கல்வி துறை டிவி ஜனவரி 21 முதல் ஒளிபரப்பு!!!

கல்வித்துறைக்காகத் தனி டி.வி சேனல்!!! 💥 தமிழக பள்ளி கல்வி துறையின் ‘டிவி’ சேனல் ஒளிபரப்பு வரும் 21ம் தேதி முதல் துவங்குகிறது.தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டு உள்ளது. 💥 பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில், இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர், ‘டிவி’ பணிகளை மேற்கொண்டுள்ளனர். 💥 கல்வித்துறைக்காக ஸ்டூடியோ ஒன்றை உருவாக்குவதற்கும், கல்வியாளர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை […]

Continue Reading

பொது தேர்வு புதிய வினாத்தாள் முறை அறிவிப்பு!!!

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வு புதிய வினாத்தாள் முறை அறிவிப்பு 💥பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, புதிய வினாத்தாள் முறையை, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு, இந்த ஆண்டு முதல் முறையாக, புதிய பாடத்திட்டத்தில் நடத்தப்படுகிறது. அதேபோல், பிளஸ் 2வுக்கும் புதிய வினாத்தாள் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. 💥 வினாத்தாள், 90 மதிப்பெண்ணுக்கு அமைக்கப்படும். செய்முறை தேர்வு அல்லாத, ‘தியரி’ பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி, தியரி பாடங்களுக்கும், […]

Continue Reading

புதிய கல்லூரிக்கு இனி அனுமதி இல்லை!!!

புதிய இன்ஜினியரிங் கல்லுாரிகள் தொடங்க இனி அனுமதி இல்லை!!! 💥 புதிய இன்ஜினியரிங் கல்லூரிகள் துவக்க, அடுத்த ஆண்டு முதல், அனுமதி அளிக்க வேண்டாம்’ என, மத்திய அரசுக்கு, நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது. 💥 இனி வரும் கல்வி ஆண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளைத் துவக்க அனுமதி அளிக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு நிபுணர் குழு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 💥 அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சகஸ்ரபுதே கூறியதாவது: […]

Continue Reading