நெல் பயிரில் துத்தநாகம் குறைபாடு…!

நெல் பயிரில் துத்தநாகம் குறைபாடு…! ⏩ நெல் பயிரில் துத்தநாகம் குறைபாட்டை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறுவது எப்படி? என்பது பற்றி இன்றைக்கு பார்ப்போம். ⏩ நெல் பயிருக்கு அடிப்படையாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் தழை, மணி, சாம்பல், இரும்பு, துத்தநாகம், காப்பர், மாங்கனீசு ஆகியவை ஆகும். காரணம் : ⏩ ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக சாகுபடி செய்வதால் நிலத்தில் எப்போதும் நீர்தேங்கி கரையா உப்புக்கள் அளவு அதிகரித்து துத்தநாகச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது. ⏩ அளவுக்கு அதிகமாக மணிச்சத்து, […]

Continue Reading

வாழையின் பயன்கள் !!

வாழையின் பயன்கள் !! 🍌 பல தாவரங்கள் மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில் வாழையின் மருத்துவ குணத்தை பற்றி இங்கு காண்போம். 🍌 அன்றாட உபயோகத்திற்கு பயன்படுவதில் மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் உள்ள தாவரம்தான் வாழை. அதாவது பல்வேறான உடல்நலக்குறைவுக்கு வாழை உதவுகிறது. 🍌 தீக்காயம் உள்ளிட்ட காயத்திற்கு குருத்து வாழை இலையை கொண்டு கட்டுப்போடலாம். 🍌 மேலும் வாழை இலை அல்லது வாழைப்பூவை கசக்கி புண்கள் ஏற்பட்ட இடத்தில் தடவினாலும் குணமாகும். 🍌 […]

Continue Reading

அகத்தி பற்றிய தகவல் !!

அகத்தி பற்றிய தகவல் !! அகத்திக்கீரை என்பது பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இது ஒரு கீரை வகையை சேர்ந்தது. அதை பற்றி மேலும் சில தகவல்களை இங்கு பார்ப்போம். பயிர் சாகுபடி செய்யும் நிலத்தில் வரப்பு ஓரத்தில் அகத்தியை சாகுபடி செய்தால், அதன் மூலம் அருகில் உள்ள பூச்சிகள் மற்றும் நோய்கள் பயிர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். மேலும் பயிர்களுக்கு தழைச்சத்து மற்றும் இரும்பு சத்தாக அகத்தி பயன்படுகிறது. இந்த அகத்தி இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாகவும் அளிக்கலாம். அகத்தி […]

Continue Reading

மர சாகுபடி…!

மர சாகுபடி…! ⏩ விவசாயிகள் நிலங்களை தரிசாக விடாமல் பழத்தோட்டம், காடுகள் வளர்ப்பு, மூலிகை தோப்பு அமைத்து பொருளாதாரம் ஈட்டலாம். அதைப்பற்றி இங்கு பார்ப்போம். மர சாகுபடி : ⏩ மரபுப்பயிர்களைப் போல் மரங்களை விவசாயம் செய்வதும் நல்ல வருமானத்திற்கு வழிவகுக்கும். மர சாகுபடிக்கு ஓரளவு நீர் வசதி உள்ள நிலங்கள் இருப்பின் நல்லது. மண் வகையைப் பொறுத்து மர சாகுபடியில் பழ மர வகைகளில் மா, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, அத்திப்பழம், முலாம்பழம் என்று பல […]

Continue Reading

பூச்சிகள் பற்றி நாம் அறியாத தகவல்கள் !!

பூச்சிகள் பற்றி நாம் அறியாத தகவல்கள் !! 🐞 பொதுவாக விவசாயத்தில் பல பூச்சிகள் நன்மை செய்வது போன்ற இயல்புகளை கொண்டுள்ளது. அதை பற்றி விரிவாக இங்கு பார்ப்போம். 🐞 சில பூச்சிகள் இறைவிழுங்கிப் பூச்சிகளிடமிருந்து, தன்னை பாதுகாத்துக்கொள்ள சில இயற்கை தன்மைகளை பெற்றுள்ளன. 🐞 அதில் ஒன்றுதான் அரிக்கும் உரோமங்கள். இந்த உரோமங்களை கொண்ட புழுக்கள் இறைவிழுங்கிகளால் தாக்கப்படுவதில்லை. ஏனெனில் அவற்றின் உரோமங்கள் தாங்க முடியாத அளவிற்கு அரிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. 🐞 இதனால் […]

Continue Reading

விவசாய கேள்வி பதில்கள்!

விவசாய கேள்வி பதில்கள்! ❓ ஆட்டுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. என்ன மருந்து கொடுக்கலாம்? ✔ பதில் : வேப்பங்கொழுந்து, கொய்யாகொழுந்து, மாதுளங்கொழுந்து ஆகியவற்றை ஒவ்வொன்றையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து மூன்றையும் அரைத்து 100 கிராம் அளவு வெல்லத்துடன் சேர்த்துக்கொடுக்கவும். ❓ சினை மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யலாமா? ✔ பதில் : சினை மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யக்கூடாது. ❓ தென்னை மரத்தில் கீழிருந்து மேல் நோக்கி கருப்பு கோடுகள் செல்கிறது. நுனி குருத்து […]

Continue Reading

மடி அம்மை – நீர்க்கோர்வை நோய்க்கு மூலிகை மருந்து…!

மடி அம்மை – நீர்க்கோர்வை நோய்க்கு மூலிகை மருந்து…! ⏩ அதிகம் பால் கறக்கும் சில கறவை மாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் ஈற்றுகளின் போது மடியின் முன்பகுதியில் இருந்து முன்னங்கால் வரை நீர் கோர்த்து கொண்டு மாடுகளுக்கு சோர்வை கொடுக்கும். ⏩ ஒரு சில நேரங்களில் கன்று ஈன்றுவதற்கு முன்பாகவும் மடியில் நீர்க்கோர்வை காணப்படும். இந்த பாதிப்பு உள்ள மாடுகளில் நாள் ஒன்றுக்கு சில முறை கூடுதலாக பால் கறப்பதன் மூலமும், கன்றுகளை கூடுதலாக பால் […]

Continue Reading

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்…!

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்…! ⏩ ஒரு ஏக்கர் பயிர்களுக்கான மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை பற்றி இன்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : ⏩ 30 கிலோ மாட்டு சாணம். சாணம் இருபத்திநான்கு மணி நேரத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும். நாட்டு பசு மாடு மற்றும் காலை மாட்டு சாணம் உபயோகப்படுத்தலாம். ⏩ 10 முதல் 15 லிட்டர் மாட்டு கோமியம். நாட்டு மாட்டு கோமியம் கிடைத்தால் மிகவும் நன்று. 4 முதல் 5 நாட்கள் கோமியம் […]

Continue Reading

கரும்பு சாகுபடிக்கு சில தொழில்நுட்ப முறைகள்…!

கரும்பு சாகுபடிக்கு சில தொழில்நுட்ப முறைகள்…! ⏩ கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் நிலத்தை தயார்படுத்துவதில் சரியான தொழில்நுட்ப முறைகளை கடைபிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். களிமண் வயல் : ⏩ பொதுவாக களிமண் நிலத்தில் நல்ல பொலபொலப்பு தன்மை பெறும் வகையில் உழவு மேற்கொள்ள முடிவதில்லை. எனவே நிலத்தை சுற்றிலும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் பாத்திகளை 6 மீட்டர் இடைவெளியில் 40 செ.மீ ஆழம் மற்றும் 30 செ.மீ அகலத்தில் அமைக்க வேண்டும். […]

Continue Reading

விதைகளுக்கு அரசு மானியம்…!

விதைகளுக்கு அரசு மானியம்…! ⏩ தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஈதமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை, (வுயுNளுநுனுயு) மூலமாக, தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து வேளாண் வட்டாரங்களிலும் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகிய பயிர்களின் விதைகள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ⏩ தமிழ்நாடு முழுவதுமுள்ள 385 வேளாண் வட்டாரங்களில், 850 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் விவசாயிகளுக்காக 50 சதவீதம் முதல் 60 […]

Continue Reading