TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய (ஆகஸ்ட் 09) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
💥 சுதந்திர தினத்தன்று லடாகில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை மகேந்திரசிங் தோனிக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

💥 ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 💥 இந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

💥 தான் நட்டு வைத்து வளர்த்த 2 மரங்கள் வெட்டப்பட்டதால் 9 வயது சிறுமி கதறி அழும் வீடியோ வைரலானதை அடுத்து, அச்சிறுமி மணிப்பூர் மாநில பசுமை தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
💥 சீனாவின் செங்க்டூ நகரில் ‘உலக காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான‘ விளையாட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது.

💥 தேர்தல் முறைகேடு விவகாரத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்க்க முடியாததால், இந்திய வில்வித்தை சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது வில்வித்தைக்கான உலக அமைப்பு.

💥 திடீர் திருப்பமாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (நாடாவின்) வரம்பின் கீழ் வருவதற்கு நாட்டின் செல்வாக்கு மிகுந்த விளையாட்டு அமைப்பான பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது.

💥 தனிநபர்களை "பயங்கரவாதிகள்" என்று அறிவிப்பதற்கான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்

💥 66வது தேசிய திரைப்பட விருதுகள் 2018 விழாவில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்ததற்காக ’கீர்த்தி சுரேஷுக்கு’ வழங்கப்பட்டுள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.