TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 09, 2019 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 09, 2019

லடாக்கில் தேசிய கொடி ஏற்றுகிறார் தோனி..!

🌟 சுதந்திர தினத்தன்று லடாகில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை மகேந்திரசிங் தோனிக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

🌟 கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி ராணுவ சேவையில் மிகுந்த ஈடுபாடு காட்டியதால் கடந்த 2011-ம் ஆண்டு அவருக்கு ராணுவம் சார்பில் கவுரவம் அளிக்கப்பட்டது.

🌟 சுமார் 8 ஆண்டுகள் இடை வெளிக்குப்பிறகு தற்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாமல் ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் ராணுவ சேவை செய்ய விருப்பம் தெரிவித்ததால், அதன் பேரில் மகேந்திரசிங் தோனி ராணுவ சேவைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

🌟 கடந்த மாதம் 31-ந்தேதி மகேந்திரசிங் தோனி ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கவுரவ எலட்டினண்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள 106 டிஏ பட்டாலியன் அணியில் சேர்ந்து டோனி ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

🌟 வருகிற 15-ந்தேதி வரை ராணுவ சேவையை மகேந்திரசிங் தோனி மேற்கொள்ள உள்ளார். 15-ந்தேதி அவர் ராணுவ சேவையை நிறைவு செய்யும் முன்பு அன்று சுதந்திர தினத் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை டோனிக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

🌟 காஷ்மீரில் இருந்து லடாக் பிராந்தியம் தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டு இருப்பதால், அந்த யூனியன் பிரதேசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அங்கு முதன் முதலாக மகேந்திரசிங் தோனி மூலம் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளனர். ஜம்மு, லடாக் யூனியன் பிரதேசம்..!

🌟 ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

🌟 ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான, ‘ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் – 2019’க்கும் அவர் ஒப்புதல் அளித்தார்.
மேலும், இந்த 2 யூனியன் பிரதேசங்களும் வரும் அக்டோபர் 31ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🌟 இந்த யூனியன் பிரதேசங்களின் எல்லைகளை வரையறைக்கும் வரைபடத்தையும் தயாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை..!

🌟 இந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

🌟 மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி ஆற்றை கடந்து செல்லும் வகையில், நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

🌟 புதுமுயற்சியாக ஹூக்ளி ஆற்றில் நீருக்கு அடியில் சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டு, அதில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 அடி ஆழத்தில், 520 மீட்டர் தூரத்துக்கு இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.

🌟 நீர்கசிவு ஏற்படாமல் இருக்க 3 அடுக்கு தடுப்புகளுடன் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்ட இந்த மெட்ரோ ரயில் பாதை பணி தற்போது முடிவடைந்துள்ளது.
இப்பாதையில் விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.

🌟 இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் கடலுக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC CCSE-4 தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - ஆகஸ்ட் 09, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!!
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.