TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 07) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
💥 சிகாகோவில் நடைபெற்ற பெட்னா மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த 46 ஆயிரம் தனித்தமிழ் பெயர்கள் கொண்ட “சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள்” எனும் நூலை தமிழக தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் வெளியிட்டார்.

💥 நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 17 சதவீத நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது. அதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

💥 இலங்கை கடற்பகுதியில் சுமார் 400 மீட்டர் நீளமுள்ள புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 💥 சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

💥 திருடப்பட்ட அல்லது தொலைந்துபோன செல்லிடப்பேசிகளை கண்காணித்து அவற்றின் செயல்பாட்டை முடக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை தொலைத்தொடர்புத் துறை அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது.
💥 நேபாளத்தில் திபெத் தலைவர் தலாய்லாமாவின் பிறந்தநாள் கொண்டாட அந்நாட்டுஅரசு தடை விதித்துள்ளது.

💥 அமெரிக்காவிடம் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் தாக்கி தகர்க்கும் அதி நவீன வெடிகுண்டை இந்திய ராணுவம் வாங்குகிறது.

💥 2020-க்குள் அனைவருக்கும் வீடு என்ற குறிக்கோளை அடைய வேண்டும் என்று கிராமப்புற பிரதமர் வீட்டு வசதி திட்டம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

💥 இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட முதல் மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டது.

💥 இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன், பிரதமர் ஆகிறார் கருத்துக்கணிப்பில் முன்னிலை வகுத்துள்ளார்.

💥 ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

💥 விலங்குகள்மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 6 அன்று ஜூனோசிஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.