TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 08) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
💥 உச்ச நீதிமன்றத்தின் வழக்குப்பதிவு அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்காணிக்க சிபிஐ மற்றும் டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகளை நியமிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

💥 அரசு கடன் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இவை முதல்முறையாக வெளிநாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளன. 💥 பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்கவரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை ஆதரித்து மக்களவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

💥 அகமதாபாத் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் இரு கோல்கள் அடித்து இந்திய அணி தலைவர் சுனில் சேத்ரி சாதனை படைத்துள்ளார்.
💥 பிரான்சில் நடைபெற்ற பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், அமெரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.

💥 போலந்தில் நடைபெற்ற குட்னோ சர்வதேச தடகளப் போட்டி மகளிர் 200 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமாதாஸ் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை விஸ்மயா வெண்கலம் வென்றார்.

💥 அரசு குடியிருப்புகளில் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி குடியிருப்போரை விரைவாக வெளியேற்றுவதற்கு வகை செய்யும் மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

💥 1 கோடி அபராதம் விதிக்கும் ஆதார் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

💥 எதிரி நாட்டு ராணுவ டேங்கர்களை அழிக்கும் திறன் கொண்ட "நாக்" ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது. இதற்கான சோதனை, ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரான் (pokhran) ராணுவ சோதனை தளத்தில் நடைபெற்றது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.