TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 09) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
💥 அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

💥 அரியானாவில் மாணவர்களுக்கு அறிவாற்றலை வளர்க்கும் முயற்சியாக பள்ளிகளில் தோப்புகரண யோகா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

💥 செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக அடுத்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதவாக்கில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. 💥 இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் ஜம் நீரை எடுத்துவர தடை செய்வதாக வெளியிட்ட அறிவிப்பை ஏர் இந்தியா விமான நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

💥 உத்தரபிரதேசத்தில் 4 மாவட்டங்களில் உடல் தகுதி இல்லாத 7 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், 18 போலீஸ்காரர்கள் என மொத்தம் 25 பேருக்கு கட்டாய ஓய்வு வழங்கி அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
💥 மும்பையில் பெஸ்ட் பஸ் கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

💥 தைவானுக்கு சுமார் 13ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

💥 சமோவாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் சீனியர் 49 கிலோ எடை பிரிவில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.

💥 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கொண்டுவந்துள்ள "தங்க விசா" திட்டத்தின் கீழ், இந்தியாவை சேர்ந்த லாலு சாமுவேல் என்ற தொழிலதிபருக்கு வழங்கப்பட்டது.

💥 தென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில், மாபெரும் உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் உள்ளது.

💥 டென்னிஸ் கோர்ட்டை சேதப்படுத்தியதற்காக முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ்க்கு விம்பிள்டன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளனர்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.