TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 09, 2019 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 09, 2019

இந்தியருக்கு கிடைத்தது முதல் தங்க விசா..!

🌟 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கொண்டுவந்துள்ள “தங்க விசா” திட்டத்தின் கீழ், இந்தியாவை சேர்ந்த லாலு சாமுவேல் என்ற தொழிலதிபருக்கு வழங்கப்பட்டது.

🌟 ஐக்கிய அரபு எமிரேட்சில் தொழில் தொடங்க, வெளிநாட்டில் இருந்து வந்து முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்களை கவுரவிக்கும் வகையில், தங்க விசா வழங்கும் திட்டத்தை, அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

🌟 ஐக்கிய அரபு எமிரேட்சின் வளர்ச்சிக்கு, பங்களிப்பவர்கள் என, அரசால் தேர்ந்தெடுக்கப்படும் மிக சிலருக்கே, இந்த விசா வழங்கப்படும். இந்த விசா பெறுபவர்களும், அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நிரந்தரமாக தங்கும் தகுதி பெற்றவர்கள்.

🌟 கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் லாலு சாமுவேலுக்கு, முதல் தங்க விசா வழங்கப்பட்டது. உடல் தகுதி இல்லாத போலீசாருக்கு கட்டாய ஓய்வு..!

🌟 உத்தரபிரதேசத்தில் 4 மாவட்டங்களில் உடல் தகுதி இல்லாத 7 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், 18 போலீஸ்காரர்கள் என மொத்தம் 25 பேருக்கு கட்டாய ஓய்வு வழங்கி அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

🌟 உத்தரபிரதேச போலீஸ் சட்டத்தின் 56-வது பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதன் காரணமாக சம்பந்தப்பட்ட போலீசாரின் நலன் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும், 3 மாத சம்பளம் உள்ளிட்ட ஓய்வூதிய பலன்கள் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் டி.ஐ.ஜி. ராஜேஷ் குமார் பாண்டே அறிவித்துள்ளார். செவ்வாய் கிரகம் செல்லும் சீன விண்கலம் தயார்..!

🌟 செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக அடுத்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதவாக்கில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

🌟 செவ்வாய் கிரகத்தின் தோற்றம், புவியியல் அமைப்பு, காந்த சக்தி உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். அதன்மூலம், செவ்வாய் கிரகம் உருவான விதம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும்.

🌟 செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழும் அறிகுறி உள்ளதா? அங்கு மனிதர்கள் வாழும் அளவுக்கு நிலைமை மாறுமா? போன்ற விஷயங்களையும் ஆய்வு செய்வார்கள். செவ்வாய் கிரகத்தை சென்றடைய 7 மாதங்கள் ஆகும்.

🌟 அப்பயணம் வெற்றிகரமாக அமைந்தால், 2021-ம் ஆண்டில் அந்த விண்கலம் பூமிக்கு தகவல்களை அனுப்பும். 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC CCSE-4 தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - ஜூலை 09, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!!
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.