TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 08, 2019 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 08, 2019

1 கோடி அபராதம் விதிக்கும் ஆதார் திருத்த மசோதா நிறைவேற்றம்..!

🌟 ஆதார் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வங்கி கணக்கு தொடங்க, செல்போன் இணைப்பு பெற ஆதார் அட்டையை தானாக முன்வந்து பயன்படுத்துவதை அனுமதிக்கும் வகையில் அவசர சட்டம் கடந்த மார்ச் பிறப்பிக்கப்பட்டது.

🌟 இதை சட்டமாக்குவதற்கு ஆதார் சட்ட திருத்த மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 4ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

🌟 இந்த மசோதாவை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

🌟 வங்கிகளோ, தொலைத்தொடர்பு நிறுவனங்களோ ஆதார் எண் அல்லது பயோமெட்ரிக் தகவல்களை திருடி தவறாக பயன்படுத்தினால் ரூ.1 கோடி அல்லது ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும்.

🌟 இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் ஆதார் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாக் ஏவுகணை சோதனை வெற்றி !!

🌟 எதிரி நாட்டு ராணுவ டேங்கர்களை அழிக்கும் திறன் கொண்ட “நாக்” ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.

🌟 இதற்கான சோதனை, ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரான் (pokhran) ராணுவ சோதனை தளத்தில் நடைபெற்றது. அப்போது மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தது.

🌟 பகல், இரவு ஆகிய இரண்டு நேரங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

🌟 ஆய்வுக்குப் பின், நாக் ஏவுகணை, ராணுவத்தில் சேர்க்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தங்கம் வென்றார் ஹிமாதாஸ்..!

🌟 போலந்தில் நடைபெற்ற குட்னோ சர்வதேச தடகளப் போட்டி மகளிர் 200 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமாதாஸ் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை விஸ்மயா வெண்கலம் வென்றார்.

🌟 ஆடவர் பிரிவு 200 மீ ஓட்டத்தில் தேசிய சாதனையாளர் முகமது அனாஸ் தங்கம் வென்றார்.

🌟 போலந்தில் நடைபெற்ற போன்ஸான் தடகள கிராண்ட்ப்ரீ போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் ஹிமாதாஸ்.

🌟 ஆடவர் 400 மீ தடை தாண்டும் போட்டியில் ஜபீர் தங்கத்தையும், ஜித்தின்பால் வெண்கலத்தையும் வென்றனர்.

🌟 400 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனைகள் சரிதா பென், சோனியா பைஷ்யா, ஆர்.வித்தியா பதக்கம் வென்றனர். 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC CCSE-4 தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - ஜூலை 08, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!!
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.