TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 07, 2019 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 07, 2019

முதல் மாதிரி கிராமம்..!

🌟 இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட முதல் மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டது.

🌟 இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போருக்கு பின்னர் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தர முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வந்தது.

🌟 மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் பதவியேற்றதும், வரும் 2020ம் ஆண்டுக்குள் போரில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 60 ஆயிரம் வீடுகள் கட்டித்தரும் செயல் திட்டம் கடந்த 2015ல் உருவாக்கப்பட்டது.

🌟 ₹120 கோடி செலவில் 100 மாதிரி கிராமங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. கம்பகா, ராணிதுகமா ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட முதல் மாதிரி கிராமம் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

🌟 இலங்கையில் கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா பங்களிப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமஸ்கிருத மொழியை கற்பிக்க 5 கிராமங்கள் தத்தெடுக்க மத்திய அரசு உத்தரவு..!

🌟 சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

🌟 ராஷ்டிரிய சமஸ்கிருதம் சன்ஸ்தான், லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடா மற்றும் திருப்பதி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடம் ஆகிய கல்வி நிறுவனங்கள் சமஸ்கிருத மொழியை கற்பித்து வருகிறது.

🌟 இந்த கல்வி நிறுவனங்கள் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து சமஸ்கிருத மொழியை கற்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

🌟 சமஸ்கிருதம் 3,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மொழியாகும்
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனம் 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் 5 கிராமங்களைத் தத்தெடுக்க ஒப்புக்கொண்டது. கத்தாரில் ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை..!

🌟 ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

🌟 அந்தப் பேச்சுவார்த்தையில், தங்களுக்குள் கடுமையாக சண்டையிட்டு வரும் பல்வேறு தரப்பினரும் தலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த அமைப்பின் பிரதிநிதிகளுடன் தோஹாவில் 7 கட்டங்களாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

🌟 ஆப்கானிஸ்தானின் பல்வேறு குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை அந்த நகரில் தற்போது நடைபெற்றுள்ளது. 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC CCSE-4 தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - ஜூலை 07, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!!
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.