TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 06) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
💥 அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

💥 யுனெஸ்கோ அமைப்பு சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூரும் இணைந்துள்ளது. 💥 உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களில் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரம் இடம் பிடித்துள்ளது.

💥 அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
💥 ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் பொது இயக்குநராக குயு டோங்யூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

💥 2019 ஆம் ஆண்டின் இந்திய விளையாட்டுப் பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

💥 தொழில்களுக்கான ஓய்வூதியத்திற்காக "பிரதமரின் கரம்யோகி மான்தன் திட்டம்" என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.

💥 விலங்குகள்மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 6 அன்று ஜூனோசிஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.