TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 05) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil Uncategorized
💥 நாடு முழுவதும் பயணம் செய்ய, ஒரே நாடு, ஒரே கார்டு என்ற பெயரில் பயண அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

💥 காந்திய கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டுசெல்ல காந்திபீடியா உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

💥 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் நிதி அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 💥 வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு பான் கார்டு (அ) ஆதார் கார்டை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

💥 ஜீரோ-பட்ஜெட் வேளாண் முறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
💥 மத்திய அரசு தாக்கல் செய்த 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், கல்வி துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

💥 உலகின் முதல் மிதக்கும் மாட்டுப்பண்ணை நெதர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ளது.

💥 எகிப்து அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, 3,000 ஆண்டுகள் பழைமையான எகிப்து அரசர் துடேங்காமனின் சிலை பிரிட்டனில் 59.7 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.41 கோடி) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

💥 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் (வயது 37) அறிவித்துள்ளார்.

💥 இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நீண்ட நாள் உலகக் கோப்பை சாதனையை முறியடித்தார் ஆப்கன் இளம் வீரர் இக்ரம் அலி கில்.

💥 2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.1.39 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது,கடந்த நிதியாண்டை விட 78 சதவீதம் அதிகமாகும்.

💥 இந்திய பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பு கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.32,804.30 கோடியாக உயர்ந்துள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.