TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 04) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
💥 சென்னையில் ஜுலை 13ம் தேதி லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெறவுள்ளது. பொதுமக்கள் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்ற விசாரணையை பயன்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்ககளுக்கு தீர்வு காணலாம்.

💥 ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஒரு அரிய இனமான பஸ்டர்ட் பறவையின் முட்டை கண்டெடுக்கபட்டு செயற்கை முறையில் குஞ்சு பொறிக்கப்பட்டுள்ளது.

💥 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் இன்று துவங்குகிறது. இன்று(ஜூலை 4) துவங்கி வரும் 7-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. 💥 குஜராத் மாநிலத்தில் இ சிகரெட் தயாரிக்க விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

💥 கிராமிய வங்கி பணியாளர்கள் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் இனி நடத்தப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
💥 நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு வரும் மூன்று ஆண்டுகளில், 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க, “ஐ.எம்.எப்.,” எனப்படும் சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.

💥 ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு வியாபாரியின் வீட்டில், 900 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இடைக்கால செஸ் நாணயம் ஒன்று தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.


💥 ஸ்காட்லாந்தில் செர்னோபிலில் வெடித்துச் சிதறிய அணு உலையிலிருந்து கதிர் வீச்சு பரவுவதைத் தடுப்பதற்காக ரூ.16,700 கோடியில் புதிய அணு உலை பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

💥 மலேசியாவில் நடந்த சர்வதேச வில் அம்பு எய்தல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 8வயது சிறுவன் ஜீவன் சிவா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

💥 அமெரிக்காவில் எலியை தாக்கிய எச்ஐவி கிருமியை அழித்து, ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

💥 சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரங்கள் உட்பட பல்வேறு பூர்வீக மரங்கள் மற்றும் தாவரங்களை வெளிக்காட்டும் சொந்தப் பாரம்பரியத் தோட்டத்தை சென்னை மாநகரமானது பெறவுள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.