TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 06, 2019 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 06, 2019

பிரதமரின் கரம்யோகி மான்தன் திட்டம் !!

🌟 குறு சிறு நடுத்தர தொழில்களுக்கான ஓய்வூதியத்திற்காக “பிரதமரின் கரம்யோகி மான்தன் திட்டம்” என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.

🌟 இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ..5 கோடிக்கு குறைவான வரவு-செலவு கொண்ட சுமார் 3 கோடி சில்லறை வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். உலக ஜூனோசிஸ் தினம் – ஜூலை 06 !!

🌟 ஜூனோசிஸ் என்பது விலங்குகளுக்கு ஏற்படும் வியாதி. இவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.

🌟 விலங்குகள்மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 6 அன்று ஜூனோசிஸ் தினம் கொண்டாடப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலம் ஆகிறது மாமல்லபுரம் !!

🌟 உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களில் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரம் இடம் பிடித்துள்ளது.

🌟 அந்த 17 இடங்களின் பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது.

🌟 ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி, கேரளாவில் உள்ள குமரகம், மராட்டிய மாநிலத்தில் உள்ள அஜந்தா, எல்லோரா, டெல்லியில் உள்ள செங்கோட்டை, ஹுமாயுன் கல்லறை, குதுப்மினார், கோவாவில் உள்ள கோல்வா, கர்நாடகத்தில் உள்ள ஹம்பி, ராஜஸ்தானில் உள்ள அமீர்கோட்டை, குஜராத்தில் உள்ள சோம்நாத், கோலிவிரா, மத்தியபிரதேசத்தில் உள்ள கஜுராகோ, அசாமில் உள்ள கஜிரங்கா, பீகாரில் உள்ள மகா போதி கோவில்.

🌟 இந்த 17 இடங்களிலும் சுற்றுலா மட்டுமின்றி, கைவினைத் தொழிலை மேம்படுத்தி வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டத்தையும் மத்திய அரசு மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC CCSE-4 தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - ஜூலை 06, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!!
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.