TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 05, 2019 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 05, 2019

காந்திய கொள்கைகளை பரப்ப காந்திபீடியா..!

🌟 காந்திய கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டுசெல்ல காந்திபீடியா உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

🌟 2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்ததன் 150ஆவது ஆண்டாகும். அந்த வகையில், 2019 அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இந்தியாவில் திறந்தவெளி கழிப்பு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கையை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

🌟 5.6 லட்சம் கிராமங்கள், திறந்தவெளி கழிப்புமுறை ஒழிக்கப்பட்டவையாக மாறியுள்ளன. இணையத்தின் மூலம் ஆன்லைனில் பயன்படுத்தும் கலைக் களஞ்சியமான விக்கிபீடியா என்ற பெயரை நினைவூட்டும் வகையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் நிதி..!

🌟 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் நிதி அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

🌟 பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.1 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது. திவால் சட்டத்தை அமல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கடந்த 4 ஆண்டுகளில் வங்கிகள் ரூ.4 லட்சம் கோடி வாராக் கடனை மீட்டுள்ளன.
பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.70,000 கோடி நிதி அளிக்க மத்திய அரசு வழங்க உள்ளது.

🌟 புதிய தொழில் தொடங்கவும், தொழில்களை விரிவுபடுத்தவும் எளிதில் கடன் கிடைப்பதால் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.

🌟 மொத்தம் 8 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும் அளவுக்கு வங்கிகள் ஒன்றுடன் மற்றொன்று இணைக்கப்படும். எகிப்தின் புராதனச் சிலை ரூ.41 கோடிக்கு ஏலம்..!

🌟 எகிப்து அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, 3,000 ஆண்டுகள் பழைமையான எகிப்து அரசர் துடேங்காமனின் சிலை பிரிட்டனில் 59.7 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.41 கோடி) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

🌟 படிகக் கல்லில் செதுக்கப்பட்ட அந்த சிலையை தனியாரிடமிருந்து 30 லட்சம் பவுண்டுக்கு (சுமார் ரூ.26 கோடி) வாங்கிய லண்டனின் கிறிஸ்டீ ஏல மையம், அதனை ஏலத்துக்கு விட்டது .

🌟 பழம்பெருமை மிக்க அந்தச் சிலை அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டிய வரலாற்றுச் சின்னம் என்பதால், அதனை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்று எகிப்து அரசும், வரலாற்று ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும், இந்த ஏல விற்பனை நடைபெற்றுள்ளது. 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC CCSE-4 தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - ஜூலை 05, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!!
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.