TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 04, 2019 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 04, 2019

முதல் முறையாக ராணுவ அணிவகுப்பு..!

🌟 அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி அந்த நாட்டு தலைநகர் வாஷிங்டனில் முதல் முறையாக ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

🌟 பிரிட்டனிடமிருந்து விடுதலை பெறுவதாக கடந்த 1776-ஆம் ஆண்டு அமெரிக்கா அறிவித்த ஜூலை 4-ஆம் தேதி, அந்த நாட்டின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது.

🌟 சுதந்திர தினத்தையொட்டி, அமெரிக்காவின் ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமான அணிவகுப்பு வாஷிங்டனில் முதல் முறையாக நடைபெற்றது.

🌟 அந்த அணிவகுப்பில் அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான பல்வேறு விமானங்கள் பங்கு பெற்றன. மேலும், ராணுவ பீரங்கிகள், கவச வாகனங்கள் உள்ளிட்டவையும் அணிவகுப்பில் பங்கேற்றன. 8 வயது சிறுவன் தங்கம் வென்று சாதனை..!

🌟 மலேசியாவில் நடந்த சர்வதேச வில் அம்பு எய்தல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 8வயது சிறுவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

🌟 சர்வதேச அம்பு எய்தும் போட்டி கடந்த 28-ம் தேதி முதல் மூன்று நாட்கள் கோலாலம்பூரில் நடைபெற்றது.

🌟 இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் ஜீவன் சிவா முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றார்.

🌟 தங்கம் வென்று சாதனை படைத்த சிறுவன் ஜீவன் சிவா திருச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர். முதல் அமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட குழு..!

🌟 வேளாண் துறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக முதல் அமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட உயர்நிலைக் குழுவை இந்திய பிரதமர் அமைத்துள்ளார்.
இக்குழுவின் தலைவராக மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவந்திர பட்நாவிஸ் செயல்படுவார்.

🌟 கர்நாடகா, ஹரியானா, அருணாச்சலப் பிரதேசம், குஜராத், உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறைக்கான அமைச்சர் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆவர். 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC CCSE-4 தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - ஜூலை 04, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!!
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.