TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜுன் 25, 2019 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜுன் 25, 2019

கேரள மாநிலம் முதலிடம் !!

🌟 மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை நீதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

🌟 இதில் கேரளம் முதலிடத்தை பிடித்துள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்கள் கடைசி இடங்களை பெற்றுள்ளன.

🌟 சுகாதார குறியீடு தொடர்பான செயல்திறன் தரவரிசை மதிப்பீடுகள் மூன்று பிரிவுகளாக மேற்கொள்ளப்பட்டது. பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என்ற அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

🌟 ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஹிமாசலப் பிரதேச மாநிலங்கள் முறையே 2,3, 4, 5 மற்றும் 6-ஆவது இடங்களை பெற்றுள்ளன.

🌟 தமிழகம் 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

🌟 சிறிய மாநிலங்களை பொருத்தவரை ஒட்டுமொத்த செயல்திறனில் மிசோரம் முதலிடத்தையும், அதிகரிக்கும் செயல்திறனைப் பொருத்தவரை திரிபுரா, மணிப்பூர் மாநிலங்கள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்றுள்ளன.

🌟 சிக்கிம், அருணாசலப் பிரதேச மாநிலங்கள் மோசமான செயல்பாட்டைக் கொண்டுள்ளன.

🌟 யூனியன் பிரதேசங்களில் சண்டீகர் முதலிடத்தையும், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

பொது இடத்தில் குப்பை கொட்டியவருக்கு 25,500ரூபாய் அபராதம் !!

🌟 திருவனந்தபுரத்தில் பொது இடத்தில் குப்பை கொட்டியவருக்கு 25,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

🌟 இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முதன்மை மாநிலமாக கேரளா விளங்கி வருகிறது.

🌟 இங்கு பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது.
குப்பை கொட்டுபவர்களை பிடிக்க திருவனந்தபுரம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மினு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

🌟 பொது இடத்தில் குப்பை கொட்டியதால், திருவனந்தபுரத்தை அடுத்த வெங்கானூரை சேர்ந்த சுனில்குமார் என்பவருக்கு 25 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. ஓசூர் – பெங்களூரு இடையே 6 வழித்தட அதிவிரைவுச் சாலை !!

🌟 ஓசூர் – பெங்களூரு இடையே, 6 வழித்தட அதிவிரைவுச் சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள், விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

🌟 STRR திட்டம் என சுருங்க அழைக்கப்படும் சாட்டிலைட் நகர வட்ட சாலை திட்டத்தின் கீழ், ஓசூரிலிருந்து ஆனேக்கல், ராம்நகர், மாகடி வழியாக பெங்களூருக்கு 6 வழி அதிவிரைவுச் சாலை அமையவிருக்கிறது.

🌟 இதற்கு தேசிய நெடுஞ்சாலை 948A என பெயரிடப்பட்டுள்ளது.

🌟 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம், 4 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🌟 சாலையின் மொத்த நீளம் 180 கிலோ மீட்டர் ஆகும். கர்நாடக மாநிலத்தில் 135 கிலோ மீட்டர் அளவிற்கும், ஓசூர் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் அளவிற்கும், அமைகிறது.

🌟 ஓசூர் பகுதியில் அமைய உள்ள 6 வழிச்சாலைக்காக, 400 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இத்திட்டத்தின் மூலம், பெங்களூரு மற்றும் ஓசூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் முற்றாக குறைய வாய்ப்புள்ளது. தேசிய யோகா போட்டியில் தமிழகத்துக்கு 8 தங்கம் !!

🌟 டெல்லியில் நடந்த தேசிய யோகா போட்டியில் தமிழக மாணவர்கள் 8 தங்கப் பதக்கங்களை வென்றனர்.

🌟 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழக மாணவர்கள், மாணவிகள் தலா 4 தங்கப்பதக்கம் பெற்றனர். 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC CCSE-4 தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - ஜுன் 25, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!!
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.