TNPSC CCSE IV EXAM 2019 பொதுத்தமிழ் இலக்கணம் பற்றிய முக்கிய குறிப்புகள் (PDF வடிவில்)!!

GT TNPSC

பொதுத்தமிழ் இலக்கண குறிப்புகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் இலக்கண குறிப்புகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் இலக்கண குறிப்புகள்!!

தன்மைப் பெயர்கள்

💥 யான் என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது என் எனத்
திரியும்.

💥 யாம் என்னும் தன்மைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது எம் எனத்
திரியும்.

💥 நாம் என்னும் தன்மைப் பன்மைப் பெயர் நம் எனக் குறுகும்.

💥 யாங்கள், நாங்கள் என்னும் தன்மைப் பன்மைப் பெயர்கள் வேற்றுமை உருபேற்கும்போது
எங்கள் எனத் திரியும். எங்களை, எங்களால், எங்களுக்கு, எங்களின், எங்களது
எனத் திரிந்து வரும்..

முன்னிலைப் பெயர்கள்

💥 நீ என்னும் முன்னிலை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது நின் எனவும்,
உன் எனவும் மாறும்.

💥 நீர் என்னும் முன்னிலைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது நும், உம் எனத்
திரியும்.

💥நீங்கள் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது
நுங்கள், உங்கள் என மாறுபடும்.

பொதுத்தமிழ் இலக்கண குறிப்புகள் !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான பொதுத்தமிழ் இலக்கண குறிப்புகள்!! தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.