TNPSC CCSE IV EXAM 2019 பொதுத்தமிழ் இலக்கணம் பற்றிய முக்கிய குறிப்புகள் (PDF வடிவில்)!!

GT TNPSC

பொதுத்தமிழ் இலக்கண குறிப்புகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் இலக்கண குறிப்புகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் இலக்கண குறிப்புகள்!!

💥அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வருவதை மோனை என்று கூறலாம்.

💥சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன.

💥மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.

💥ஒரு செய்யுள் அல்லது வாக்கியங்களில் முதலெழுத்து ஒன்றி(ஒரே எழுத்தாக அல்லது ஒரே இன எழுத்தாக)வருவது மோனை ஆகும். 💥அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி வருவது அடிமோனை ஆகும்.

💥ஒரடியில் முதல் இரு சீர்களில் வரும் மோனை இணை மோனை எனப்படும்.

💥ஒரடியில் முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வரும் மோனை பொழிப்பு மோனை எனப்படும்.

💥ஒரடியில் முதல் மற்றும் நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றி மோனை வந்துள்ளது. எனவே, ஒரூஉ மோனை எனப்படும்.

பொதுத்தமிழ் இலக்கண குறிப்புகள் !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான பொதுத்தமிழ் இலக்கண குறிப்புகள்!! தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.