TNPSC CCSE IV EXAM – 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு – 2!!

GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்ச்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என்று நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?- கவிஞர் காசி ஆனந்தன்

💥ஒத்த ஓசையில் முடியும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? – இயைபு சொற்கள்

💥நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு …….. ஆக இருக்கும். – அசதி

💥தமிழ்க்கும்மி என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? – கனிச்சாறு

💥பாவலரேறு என்னும் சிறப்புப் பெயருடையவர் யார்? – பெருஞ்சித்திரனார்

💥கனிச்சாறு நூலானது எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? – எட்டு

💥மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படுவது எது? – மொழி

💥மனிதனை பிற உயிரினங்களிம் இருந்து வேறுபடுத்தியும், மேம்படுத்தியும் காட்ட உதவுவது? – மொழி

💥யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ் மொழியினை வியந்து பாடியவர் யார்? – பாரதியார்

💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!