TNPSC CCSE IV EXAM – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு(PDFவடிவில்) – 1!!

GK TNPSC

பொது அறிவு வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொது அறிவு வினா விடைகள்!!

💥நீரில் மகரந்த தூள்களின் பிறழ்ச்சியான நகர்வானது எவ்வாறு அழைக்கப்படுகிறது? – பிரெளனியன் நகர்வு

💥பிரெளனியன் இயக்கத்தை விளக்கிய தாவர வல்லுநர் – இராபர்ட் பிரெளன்

💥மகரந்த துகள்களானது தனியான நீர் துகள்கள் அல்லது மூலக்கூறுகளால் நகர்கின்றன என்பதனை விளக்கியவர் யார்? – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

💥திரவங்கள் மற்றும் வாயுக்கள் இரண்டிலுள்ள துகள்கள் ———- முறையில் நார்கின்றன. – ஒழுங்கற்ற முறையில்

💥அணுவின் நிலைபாடு பற்றிய கொள்கையை வெளியிட்டவர் – ரிச்சர்ட் ஃபெயின்மென்

💥1857ல் புரட்சியின் போது இராணி லட்சுமிபாயுடன் சேர்ந்து போரிட்டவர் – தாந்தியா தோப்

💥1857-ம் ஆண்டு மாபெரும் புரட்சிக்குப்பின் இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் – இங்கிலாந்து அரசி விக்டோரியா மாகாராணி

💥பாரக்பூரில் முதல் முதலாக புரட்சி வெடிப்பதற்கு காரணமாக இருந்தவர் – மங்கள் பாண்டே

💥பெரும் புரட்சியின் போது டெல்லி ஆண்ட அரசர் – இரண்டாம் பகதூர்ஷா ( முகலாயப் பேரரசர்)

💥கான்பூரில் நடைபெற்ற புரட்சிக்கு தலைமை தாங்கியவர் – நானாசாகிப்

💥லக்னோவில் நடந்த பரட்சிக்கு தலைமையேற்றவர் – பேகம் ஹஜ்ரத் மஹால்

💥மத்திய இந்தியாவில் நடந்த புரட்சிக்கு தலைமையேற்றவர் – ஜான்சி இராணி லெட்சுமிபாய்

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான பொது அறிவு வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!