TNPSC CCSE IV EXAM – 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு – 1!!

GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்ச்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥 1940-ல் வேங்கடசாமி நாட்டாரின் சொற்பொழிவாற்றலுக்கு சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் வழங்கிய விருது – நாவலர்

💥ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை

💥சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் – ரா.பி.சேதுப்பிள்ளை

💥உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் – ரா.பி.சேதுப்பிள்ளை

💥ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச் சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் – கம்பர் கழகம்

💥சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத்தலைவராகச் செயல்பட்டவர் – வையாபுரிப்பிள்ளை

💥வையாபுரிப்பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த காலத்தை எவ்வாறு கூறுவர் – பொற்காலம்

💥1926 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றவர் – வையாபுரிப்பிள்ளை

💥நாட்டிற்கு உழைப்பதற்காக திரு.வி.க. அவர்கள் எக்கல்லூயில் தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விலகினார் – இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி

💥திரு.வி.கலியாணசுந்தரனார் எழுதிய அரசியல் நூல்களில் ஒன்று – தமிழ்நாட்டுச் செல்வம்

💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.