TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜுன் 07) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil TNPSC
🌀 அமெரிக்க விமானப்படையில் முதன்முறையாக டர்பன் அணிந்து கொள்ள சீக்கிய விரருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

🌀போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அமெரிக்க கோடீஸ்வரிகள் 2019-ம் ஆண்டுக்கான பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

🌀ராஜஸ்தான் மாநில அரசானது “ஆப்கி பேட்டி” திட்டத்தின் கீழ் பள்ளிச் சிறுமிகளுக்கு வழங்கி வந்த நிதியுதவியை உயர்த்தியுள்ளது.
🌀 அஸ்ஸாம் மாநில அரசானது மாணவர்கள் தங்கள் முதுகலைப் பட்டப்படிப்பு வரையிலான படிப்பிற்கு உதவித் தொகை பெறுவதற்காக அவர்களின் பெற்றோரின் வருடாந்திர வருமான உச்ச வரம்பை 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தியுள்ளது.

🌀லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் உயரிய மனித உரிமைகள் விருதைப் பெற்றுள்ளார்.

🌀இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் வந்துள்ள ஜெய்சங்கர் நேபாளப் பிரதமர் லோட்டேய் ஷெரிங்-ஐ இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

🌀 உதான் திட்டத்தின் கீழ் மைசூரு-பெங்களூரு இடையே விமான சேவை தொடங்கியது. இதனை மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கிவைத்தார்.

🌀போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் இருந்து அபராதத்தை வசூலிக்க இ-செலான் எனப்படும் நவீன இயந்திரத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.



🌀இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., மத்திய  மாநில பட்ஜெட்டை மதிப்பிடும் வகையில், புதிய குறியீடை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

🌀ராஜஸ்தான் மாநில அரசானது “ஆப்கி பேட்டி” திட்டத்தின் கீழ் பள்ளிச் சிறுமிகளுக்கு வழங்கி வந்த நிதியுதவியை உயர்த்தியுள்ளது.