TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜுன் 06) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil TNPSC
🌀 சேலம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், ஈரடுக்கு மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.

🌀 நாட்டிலேயே முதன்முறையாக 5 துணை முதல் அமைச்சர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அவர் அறிவித்துள்ளார்.
🌀 ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரூ.550 மதிப்புள்ள நாணயம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌀 இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்தி காந்த தாஸிடம் தந்தன் நீலகனி கமிட்டி இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை அதிகரிப்பதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளனர்.

🌀 நிதி ஆயோக் அமைப்பை மாற்றியமைப்பதற்கும், இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை உறுப்பினராக சேர்ப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

🌀 தமிழக அரசின் செய்தித்துறை இயக்குனராக இருப்பவர் பி.சங்கர். இவர் கூடுதல் பொறுப்பாக தமிழக அரசு கேபிள் டி.வி. மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🌀 அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பு ஏற்று உள்ளார்.



🌀 ரூ.300 கோடிக்கு, 100க்கும் அதிகமான 'ஸ்பைஸ்' ரக வெடிகுண்டுகளை வாங்க, இந்தியா - இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

🌀 கிராமப்புற பெண்களுக்கு டிஜிட்டல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஒரு திட்டமான ‘டிஜிட்டல் சாகி’ “Digital Sakhi”-L&T நிதி சேவைகள் (LTFS) தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் இரண்டு கிராமங்களில் தொடங்கியுள்ளது.

🌀 இரு ஆஸ்கார் விருதுகளை வென்ற, ஹாலிவுட் நடிகர் டென்செல் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.