TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( ஜுன் 05) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil TNPSC
🌀 நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வேலையின்மை ஆகியவற்றைப் பற்றி ஆலோசித்து சரியான முடிவுகளை எடுப்பதற்காக 8 அமைச்சரவை குழுக்களை மாற்றி அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

🌀 யூதப்படுகொலையின் நினைவாக 2020 அக்டோபரில் யூதப்பகைமைக்கு எதிரான ஒரு சர்வதேச மாநாட்டை சுவீடன் நடத்தவுள்ளது.
🌀 சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) தலைவராக ஜியானி இன்ஃபேன்டினோ தொடர்ந்து 2ஆவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

🌀 பிரதமர் நரேந்திர மோடி தேசிய பாதுகாப்பு நிதியத்தின் கீழ் ‘பிரதம மந்திரி ஸ்காலர்ஷிப் திட்டம்’ பிரதான மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

🌀 ஜப்பானின் பியூகோக நகரில் வரும் 8ஆம் தேதி துவங்கி இரண்டு நாட்களுக்கு ஜி20 மாநாடு நடைபெற உள்ளது, இந்த மாநாட்டில் இந்தியா சார்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளனர்.

🌀 கூகுள் தலைமைச் செயலதிகாரியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை, அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கின் தலைவர் அடேனா ஃப்ரீட்மேன் (Adena Friedman) 2019-ஆம் ஆண்டுக்கான குளோபல் லீடர்ஷிப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

🌀 இந்தியா-பிரான்ஸ் விமானப்படைகள் இடையே கருடா என்ற பெயரில் தொடர்ந்து விமானப்படை பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரான்ஸ் நாட்டில் இரு நாடுகளின் விமானப்படைகளும் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.



🌀 சீனா முதன் முறையாக நடுக்கடலில் கப்பலில் இருந்து ராக்கெட் மூலம் செயற்கைக் கோள்களை ஏவி வெற்றி கண்டுள்ளது.

🌀 சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.

🌀 உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5-ம் தேதி உலகளாவிய சூழலைக் கவனித்துக்கொள்ளும் தினமாக அறிவிக்கப்பட்டது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.