TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 14!!!

GT TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!


💥 சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது ……………………….. – நாவற்பழம்

💥 பெண்ணன் முகத்திற்கு ………………………. ஒப்புமையாகக் காட்டப்பட்டுள்ளது. – நிலவு

💥 பொருத்துக.
அ. வண்டு – 1) தாமரை
ஆ. மங்கையின் முகம் – 2) நாவற்பழம்
இ. மலர்க்கரம் – 3) வான்நிலவு –
Ans: 2 3 1

💥 செங்கதிரவன் – பிரித்து எழுதுக. – செம்மை + கதிரவன்

💥 தாய்மையன்பு – பிரித்து எழுதுக. – தாய்மை + அன்பு

💥 தேம்பாவணி நூலின் ஆசிரியர் ………………………. – வீரமாமுனிவர்

💥 வீரமாமுனிவரின் இயற்பெயர் ………………….. – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி

💥 வீரமாமுனிவர் ………………….. – நாட்டைச் சார்ந்தவர். – இத்தாலி

💥 நாடகமேத்தும் நாடகக்கணிகை எனக் குறிப்பிடப்படுபவர் ———– மாதவி

💥 சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் —————அடியார்க்கு நல்லார்

💥 மறைமலையடிகள் எழுதிய நாடகம் ——————-சாகுந்தலம்

💥 தமிழின் முப்பெரும் பாகுபாடுகள் : இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பன தமிழின் முப்பெரும் பாகுபாடுகள்

💥 நாடகத்திற்கு இலக்கணம் வகுத்த நூல்கள் யாவை? – முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்துநூல்.

💥 நொண்டி நாடகம் – பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நொண்டி நாடகங்கள் தோன்றின.

💥 சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், நாட்டியமாடும் மாதவியை________ என்று குறிப்பிடுகிறார் – நாடகமேத்தும் நாடகக்கணிகை

💥 தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை _____எனவும், ஒரு கதையைத் தழுவி வேடம்புனைந்து ஆடுவதை________எனக் குறிப்பிட்டு வந்துள்ளனர் – நாட்டியம், நாடகம்


💥 நாடகவியல் என்னும் நூலினைக் செய்யுள் வடிவில் இயற்றியவர்?- பரிதிமாற்கலைஞர்

💥 மனோன்மணியம் என்னும் நாடகக் காப்பியத்தைக் கி.பி.1891 ஆம் ஆண்டில் வெளியிட்டவர்______.- பேராசிரியர் சுந்தரனார்

💥 "தமிழ் நாடகத் தந்தை" என்று போற்றப்பட்டவர் ______ ஆவார் - பம்மல் சம்பந்தனார்

💥 ஊர் உறங்கியது என்பது -------------- ஆகுபெயர் - இட

💥 நீலம் சூடினாள் ------------- ஆகுபெயர். - பண்பு

💥 வறுவல் தின்றான் என்பது--------தொழிலாகுபெயர்

💥 சித்திரை வந்தாள் என்பது--------காலவாகுபெயர்

💥 ஆகுபெயர் __________ வகைப்படும் - பதினாறு

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.