TET Exam 2019 : பொது அறிவு – முக்கிய வினா விடைகள் – 07 !!

GK TNPSC

ஆசிரியர் தகுதித் தேர்வு – பொது அறிவு முக்கிய வினா விடைகள் – 07

💠அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠 கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர் யார்? – ஜெயதேவர்

💠 சந்தவார் போர் எப்போது நடைபெற்றது? –கி.பி. 1194

💠 அலாவுதீன் கில்ஜி படையெடுப்பால் ஜவ்ஹர் முறைப்படி இறந்த இராணி –இராணி பத்மினி

💠 பாஸ்கராச்சாரியாரால் எழுதப்பட்ட சிறந்த வானவியல் நூல் – சித்தாந்த சிரோன்மணி

💠 முதலாம் மகேந்திரவர்மன் பல்லவ மன்னனை தோற்கடித்த சாளுக்கிய மன்னர் – இரண்டாம் புலிகேசி

💠 எல்லோராவின் கைலாசநாதர் குடைவரைக் கோயிலை உருவாக்கியவர் – முதலாம் கிருஷ்ணா

💠 இந்திய கோயில் கட்டடக்கலையின் தொட்டில் எனப் புகழப்படுவது – ஐஹோலே கல்வெட்டு

💠 ஐஹோலேவில் உள்ள புகழ்பெற்ற கல்வெட்டை உருவாக்கியோர் – இரவிகீர்த்தி

💠 இராட்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர் –தந்தி துர்கா

💠 அப்பர் என்றழைக்கப்படும் சைவக்குரவர் – திருநாவுக்கரசர்

💠 சைவக்குரவர் எனப்படுபவர்கள் யாரை வழிபட்டனர்? – சிவன்

💠 பல்லவர்களின் தலைநகரம் – காஞ்சிபுரம்

💠 மாமல்லன் எனப்படுபவர் – நரசிம்மவர்மன்

💠 குடைவரைக் கோயிலை அறிமுகப்படுத்தியவர் – மகேந்திரவர்மன்

💠 பல்லவ ஆட்சியை தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்தவர் – சிம்மவிஷ்ணு

💠 முதலாம் நரசிம்மவர்மனின் பட்ட பெயர் – வாதாபி கொண்டான்

💠 பாண்டிய பேரரசானது எவ்வாறு அழைக்கப்பட்டது? – மண்டலம்

💠 காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் – இராஜசிம்மன்

💠 சீனப்பயணி யுவான்சுவாங் யாருடைய ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு வந்தார்? – நரசிம்மவர்மன்

💠 நந்திக் கலம்பகத்தில் புகழப்படும் பல்லவ மன்னன் – மூன்றாம் நந்திவர்மன்

💠 மாமல்லப்புரத்தில் கடற்கரைக் கோயிலைக் கட்டியவர் – இரண்டாம் நரசிம்மவர்மன்

💠 தஞ்சை பெரியகோவிலை கட்டியவர் – இராஜராஜ சோழன்

💠 தஞ்சை பெரியகோயில் எப்போது கட்டப்பட்டது? – கி.பி.1010

💠 தக்கோலம் போரில் தோல்வியடைந்த சோழ மன்னன் – -முதலாம் பராந்தக சோழன்

💠 ஜாவா, சுமத்ரா தீவுகளை வென்ற சோழன் – இராஜேந்திர சோழன்

💠 சுங்கம் தவிர்த்த சோழன் எனப் புகழப்பட்ட சோழன் - குலோத்துங்கன்

💠 முதலாம் தரெய்ன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் - பிருதிவிராசன்

💠 கங்கை கொண்ட சோழபுர நகரை நிர்மானித்தவர் - இராஜேந்திரன்

💠 குடவோலை முறையைப் பற்றி கூறும் கல்வெட்டு உள்ள இடம் - உத்திரமேரூர்

💠 சோழர்களது காலத்தில் பூமிபுத்திரர்கள் என்றழைக்கப்பட்டவர்கள் யார்? - விவசாயிகள்

☀ பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.