SI Exam – 2019: GK வினா விடைகளின் தொகுப்பு – 4!!

GK TNPSC

SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்

💠SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠SI தேர்விற்கான பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠SI தேர்வில் வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறியவர் யார்?- காந்தியடிகள்

💠அரசின் கொள்கைகளை வகுப்பவர்கள் யார்? – கேபினட் அமைச்சர்கள்

💠மக்கள் ஆட்சி என்ற வார்த்தையினை முதலில் பயன்படுத்தியவர் யார்? – ஹெரோடோட்டஸ்

💠எதிர்கட்சி தலைவர் எதற்கு சமமான அதிகாரங்களைப் பெறுகிறார்? – ஆளுங்கட்சி அமைச்சர்

💠இந்தியாவில் காணப்படும் கடற்கரையின் நீளம் என்ன? – 7516கி.மீ

💠ஆளுநர் ஆவதற்கு தகுதியான வயது எவ்வளவு? – 35 வயது

💠பக்கிம் சந்திர சட்டர்ஜி ஆனந்த மடம் என்ற நூலை எப்போது வெளியிட்டார்? – 1882

💠நமது தேசிய பாடலை முதன் முதலில் பாடியவர் யார்? –இரவீந்திரநாத் தாகூர்

💠அரசியல் அமைப்பு சட்டம் இயற்றும் பணி எத்தனை நாள் நடைப்பெற்றது? – 2ஆண்டுகள் 11 மாதங்கள் 18நாட்கள்

💠அரசு நெறிமுறைக் கோட்பாடுகளின் முக்கிய நோக்கம் என்ன? – மக்கள் நலனை பாதுகாப்பது 💠நமது தேசிய மலரான தாமரை எதனைக் குறிக்கிறது? –ஒற்றுமை

💠தேசிய கீதம் முதன் முதலில் எப்போது பாடப்பட்டது? – 1911-ம் ஆண்டு டிசம்பர் 27

💠இந்திய தேசிய கீதம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? – வங்காளம்

💠மக்களவையைக் கலைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? – குடியரசு தலைவர்

💠மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் – 5 ஆண்டுகள்

💠மதச் சார்பான நிறுவனங்களை நடத்தும் உரிமைக்கான விதி என்ன? – விதி 26

💠மக்களவையின் தலைவர் யார்? – சபாநாயகர்

💠எந்த ஆண்டு வங்காள தேசம் தனி நாடாக ஆனது?- 1971

💠இந்திய தேர்தல் ஆணையரை நியமிப்பவர் யார்? – குடியரசு தலைவர்

💠நிதி ஆயோக் குழுவின் தலைவர் யார்? – பிரதமர்

💠நிலநடுக்கம் தோன்றும் மையம் – நிலநடுக்க மையம்

💠கண்டமேலோடு எத்தனை அடுக்குகளால் ஆனது – மூன்று

💠சியால் அடுக்கு எந்த அடுக்கின் மீது மிதந்து கொண்டு உள்ளது – சிமா அடுக்கு

💠பூமியின் மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு கிடைமட்ட நகர்வினை ஏற்படுத்துவது – மலையாக்க நகர்வு

💠மேற்புற அலை எவ்வாறு அழைக்கப்படுகிறது - L அலைகள்

💠எரிமலை என்பது - பூமியின் ஒரு உள்ளியக்க சக்தி

💠வேசூவியஸ் எரிமலை எங்கு உள்ளது - இத்தாலி

💠மவுண்ட் கிளிமாஞ்ரோ எரிமலை எங்கு உள்ளது - ஆப்பிரிக்கா

💠பியூஜியாமா எரிமலை எங்கு உள்ளது - ஜப்பான்

💠நார்கண்டம் எரிமலை எங்கு உள்ளது - இந்தியா

💠மோனாலோவா எரிமலை எங்கு உள்ளது - ஹவாய்

💠பெந்தலாசா என்பது எந்த மொழி சொல் - கிரேக்க சொல்

💠கண்டத்தின் மேலடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - சியால்

💠பிளவு கோட்டிற்கு இடையே காணப்படும் பகுதி மேல்நோக்கி தள்ளப்பட்டால் அது அவ்வாறு அழைக்கப்படுகிறது - பீடபூமி

💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.