TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 16) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil TNPSC
🌀 இந்திய மக்கள் ஒவ்வொருவரின் மருத்துவ விபரங்களையும், மின்னணு முறையில் சேமிக்கும், ‘டிஜிட்டல் ஹெல்த் லாக்கர்’ திட்டத்தை, மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

🌀 மன்னார் வளைகுடாவில் தென்கிழக்கு ஆசியாவின் முதல் உயிர்கோள காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.


🌀 கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா, அமெரிக்காவின் அலபாமா மாகாண பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

🌀 உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரம் அமைக்கப்பட்டதன் 130-ஆவது ஆண்டு தினம், கொண்டாடப்பட்டது.

🌀 யுவ விக்யானி கார்யக்ரம்(Yuva Vigyani Karyakram) என்ற இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை ISRO செயல்படுத்தியுள்ளது.

🌀 முதுகெலும்பு வளைவு நோயால் பாதிக்கப்பட்ட சேலத்தைச் சேர்ந்த மாணவியை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் அரிய சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்தியுள்ளனர்.

🌀 உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் மலையேற்ற வீராங்கனையான ஷீத்தல் ராஜ் எவரெஸ்ட் மலைச்சிகரத்தைத் தொட்டுள்ளார்.

🌀 IPL 2019 கிரிக்கெட் போட்டியில் நேர்மையான விருது ஹைத்ராபாத் சன் ரைசஸ் அணிக்கு வழங்கப்பட்டது.


🌀 முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிம் ஜாபர் பங்களாதோஷ் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🌀 தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஆர்.எஸ்.செளஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.