TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 09 !!!

GT TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!


💥 கனகம் என்பதன் பொருள் ………….. – பொன்

💥 புரவி என்பதன் பொருள் ………….. – குதிரை

💥 நெற்கதிர் – பிரித்து எழுதுக. – நெல் + கதிர்

💥 நிலவுமுண்டோ – பிரித்து எழுதுக. – நிலவும் + உண்டோ

💥 மண்ணுண்டோ – பிரித்து எழுதுக. – மண் + உண்டோ

💥 நின்னடி – பிரித்து எழுதுக. – நின் + அடி

💥 வேந்தர் என்பதன் பொருள் ……… – மன்னர்

💥 ஆழி என்பதன் பொருள் ……………. – மோதிரம்

💥 கம்பர் இயற்றிய நூல்கள் யாவை? – சிலையெழுபது, சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம், கம்பராமாயணம், ஏரெழுபது, மும்மணிக்கோவை

💥 வேளாண் பல்கலைக்கழகம் உள்ள இடம் ………… – கோவை

💥வேளாண்தொழிலில் உள்ள கூறுகள் …………. – 6

💥வானம் பார்த்த பூமி என்பது ……………. – புன்செய்

💥கேட்காத கடனும் பார்க்காத பயிரும் …………… – பாழ்

💥பஞ்சகவ்வியம் என்பது ………………. பொருள்களால் ஆனது. – 5

💥வேற்றுமை என்றால் என்ன? – பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை எனபப்டும்.

💥வேற்றுமை எத்தனை வகைப்படும்? அவை யாவை? – எட்டு, முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை

💥மூன்றாம் வேற்றுமை உருபுகள் யாவை? – ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்

💥போலி என்றால் என்ன? – ஒரு சொல்லில், முதலிலுள்ள எழுத்தோ இடையில் உள்ள எழுத்தோ, இறுதியிலுள்ள எழுத்தோ மாறுப்பட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பின், அது போலி எனப்படும்.

💥போலி எத்தனை வகைப்படும்? – மூன்று

💥ஏழைக்குப் பரிசு கிடைக்க பீர்பால் செய்த செயல் என்ன? – சமையல்

💥விளி வேற்றுமை யாது? – எட்டாம் வேற்றுமை

💥 அங்கக வேளாண்மையின் வேறுபெயர் ............ - இயற்கை வேளாண்மை

💥 பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்களைக் கலந்து செய்வது ............ - பஞ்சகவ்வியம்

💥 உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்துக்கும் முதல்வன் ........... - கதிரவன்

💥 பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு ............ எனப்படும். - வேற்றுமை உருபு

💥 உவப்பத் தலைக்கூடி ............... பிரிதல் அனைத்தே புலவர் தொழில். - உள்ளப்

💥 ஒருமைக்கண் தான்கற்ற .............. ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. - கல்வி

💥 கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை ............... - யவை

💥 ‘கசடற' - பிரித்து எழுதுக. - கசடு + அற

💥 ‘ எழுத்தென்ப' - பிரித்து எழுதுக. - எழுத்து + என்ப

💥 'மணற்கேணி' - பிரித்து எழுதுக. - மணல் + கேணி