TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 15) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 இணையதள தகவல் களஞ்சியமான பன்மொழி விக்கிபீடியாவுக்கு, சீனா முழுமையாக தடை விதித்துள்ளது.

🌀 மாநில பயங்கரவாத தடுப்பு படை தலைவராக தேவன்பார்தி நியமிக்கப்பட்டார்.


🌀 அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் என்ற ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகிலேயே குழந்தைகள் அதிகம் இறக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

🌀 செல்போன் குறுஞ்செய்தி மற்றும் இணையதளம் வாயிலாக ஆதார் எண்ணை முடக்கும் வசதியை, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

🌀 பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக, விங் கமாண்டர் அபிநந்தனின் படைப்பிரிவினருக்கு சிறப்பு பேட்ஜ்களை வழங்கி விமானப்படை கவுரவித்துள்ளது.

🌀 நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனையை படைத்தார்.

🌀 ரஷ்யாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேட்டையாடுபவரின் எலும்புக் கூடு ஆயுதங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

🌀 உலகின் மிகவும் வயதான மனிதரான 123 வயது அப்பாஸ் இலியிவ் காலமானார்.


🌀 வரும் 22ம் தேதி வரை நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவில் ஆசியா கண்டத்தில் உள்ள 47 நாடுகளின் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

🌀 ஒவ்வொரு ஆண்டும் மே 15 ஆம் தேதி சர்வதேச குடும்பங்கள் தினம் (IDF – International Day of Families) அனுசரிக்கப்படுகின்றது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.