TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 08 !!!

GT TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!


💥 நல்லாதனார் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்? – திருநெல்வேலி

💥 “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” – இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது? – சிலப்பதிகாரம்

💥 சித்திரக் காரப்புலி என அழைக்கப்படுபவர் யார்? – முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

💥 ‘அஞ்சு’ என்ற சொல்லுக்கு இலக்கண குறிப்பு என்ன? – முற்றுப் போலி

💥 கண்ணா வா! இந்த வாக்கியம் எந்த வேற்றுமையைச் சார்ந்தது? – 8 ஆம் வேற்றுமை

💥 கனகம் என்பதன் பொருள் யாது? – பொன்

💥 மதோன்மத்தர் என்ற சொல்லை குறிப்பது எது? – சிவன்

💥எல்லாம் சொல்லும் பொருள் குறித்தனவே ————— ஆகும். – தொல்காப்பியம்

💥 கோவூர்கிழார் எந்த மன்னரிடம் அவைக்கள புலவராக இருந்தார்? – நலங்கிள்ளி

💥 சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர் யார்? – நாயனார்

💥நோய்க்கு மருந்து இலக்கியம் என்றவர் யார்? – மகாவித்வான்

💥எழுத்து என்பதன் பொருள் ஓவியம் என கூறும் எட்டுத்தொகை நூல்கள் யாவை? – பரிபாடல், குறுந்தொகை

💥தி.ரு.வி.க. இயற்றிய ‘பொறுமை வேட்டல்’ எனும் நூலில் உள்ள பாக்கங்களின் எண்ணிக்கை? – 430

💥 ஹிட்லரையே மன்னிப்பு கேக்க செய்தவர் யார்? – செண்பகராமன்

💥எந்த ஆண்டில் இரண்டாம் கல்வி மாநாடு நடைபெற்றது? – 1917

💥தமிழ் மூதாட்டி, அருந்தமிழ்ச்செல்வி என அழைக்கப்படுபவர் யார்? – ஒளவையார்

💥 சைவம் வளர்த்தசெல்வி என அழைக்கப்படுபவர் யார்? - மங்கையர்கரசியார்

💥 சொல்லின் செல்வன் என அழைக்கப்படுபவர் யார்? - அனுமன்

💥 சொல்லின் செல்வர்(இலக்கியம்) என அழைக்கப்படுபவர் யார்? - இரா.பி.சேதுபிள்ளை

💥 சொல்லின் செல்வர்(அரசியல்) என அழைக்கப்படுபவர் யார்? - ஈ.வி.கே.சம்பத்

💥 சேவல் என்பதன் எதிர்ப்பால் பெயர் என்ன? - பேடு

💥 பெருஞ்சோறு என்பது என்ன? - மன்னன் போர் வீரர்களுக்கு கொடுப்பது

💥 கணக்காயர் என்பதன் பொருள் என்ன? - ஆசிரியர்

💥 அம்மை, அப்பன் எனும் சொல் வழங்கும் நாடு எது? - நாஞ்சில் நாடு

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.