SI Exam -2019 : பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளின் தொகுப்பு!!

GK TNPSC

SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்

💠SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠SI வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

கார உப்புகள் :

💠கார உப்புகள் (Alkali salts or basic salts) என்பவை ஒரு வலிமையான காரம் மற்றும் பலவீனமான அமிலம் ஈடுபடும் நடுநிலையாக்கல் வினையில் உருவாகும் உப்புகள் ஆகும்.

💠கரையாத கார உப்புகள் வீழ்படிவாக்கல் வினைகளின் மூலமாகத் தயாரிக்கப்படுகின்றன.

💐எடுத்துகாட்டுகள்:
💠சோடியம் கார்பனேட்டு
💠சோடியம் அசிட்டேட்டு
💠பொட்டாசியம் சயனைடு
💠சோடியம் சல்பைடு

💠கார உப்புகள் பெரும்பாலும் பாத்திரம் கழுவதற்கு பயன்படுத்தப்படும் சலவைக்காரத் தூளின் பகுதிப்பொருளாகக் காணப்படுகின்றன. 💠கார உப்புக்கும் காரத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், காரம் என்பது கார உலோகங்கள் அல்லது காரமண் உலோகங்களின் கரையக்கூடிய ஐதராக்சைடு உப்புகள் ஆகும்.

💠கார உப்புகள் என்பவை, எந்த உப்பு நீராற்பகுப்பு அடைந்து காரக்கரைசலைக் கொடுக்கிறதோ அவ்வுப்பு காரவுப்பு எனப்படுகிறது.

காரங்கள்:


💠அடர் அல்லது வலிமையான காரங்கள் அமிலத்தன்மையுள்ள பொருட்களுடன் தீவிரமாக வினைபுரிகின்றன.

💠காரங்களின் நீர்த்த கரைசல்கள் அல்லது உருகிய கரைசல்கள் அயனிகளாக சிதைவடைந்து மின்சாரத்தை கடத்துகின்றன.

💠காரங்கள் கசப்புச் சுவையுடையவை

💠pH மதிப்பு 7 விட அதிகமாக இருந்தால் அது காரம்

💠நீரில் கரையும் காரங்களுக்கு என்ன பெயர் – எரிகாரங்கள்

💠எரிகாரங்கள் அதற்கு வேறு பெயர் – அல்கலிகள்

💠அல்கலி என்ற சொல் எந்த மொழி சொல் – அல்குவிலி என்ற அரேபிய சொல்

💠அல்கலி என்ற சொல்லுக்கு பொருள் – தாவரச் சாம்பல்

💠நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் (OH) தரும் சேர்மங்கள் – காரங்கள்

💠அனைத்து அல்கலிகளும் காரங்கள் ஆனால் எல்லா காரங்களும் அல்கலிகள் அல்ல

💠அல்கலிகள் சில உதாரணம் – சோடியம் ஹைட்ராக்சைடு (எரிசோடா), பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (எரிபொட்டாஷ்) 💠நீரில் லேசாக கரையும் காரம் – கால்சியம் ஹைட்ராக்சைடு

💠நீரில் கரையாத காரங்கள் – கால்சியம் ஆக்ஸைடு, மெக்னீஷியம் ஹைட்ராக்சைடு

💠காரம் சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றும்.

💠காரம் பினாப்தலினுடன் வினை புரிந்து இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கும்.

💠காரம் மெத்தில் ஆரஞ்சுடன் வினை புரிந்து மஞ்சள் நிறத்தை தருகிறது.

அமிலங்கள் பற்றிய சில தகவல்கள்:


💠அமிலம் சுவை – புளிப்பு

💠pH மதிப்பு 7 விட குறைவாக இருந்தால் அது அமிலம்

💠அமிலம் என்பது எந்த மொழி சொல் – அசிட்ஸ் என்ற லத்தீன் மொழி சொல்

💠அசிடஸ் என்ற லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட ஆசிட் என்ற ஆங்கில மொழியில் பொருள்

💠நீரில் கரையும் போது ஹைட்ரஜன் அயனிகளைத் (H+) தரும் பொருட்கள் – அமிலங்கள் 💠எல்லா அமிலங்களிலும் ஹைட்ரஜன் இருக்கும் ஆனால் ஹைட்ரஜன் உள்ள எல்லா சேர்மங்களும் அமிலங்கள் அல்ல.

💐அமிலங்கள் வகைகள் – 2 1. கனிம அமிலங்கள் 2. கரிம அமிலங்கள்

💠தாதுப் பொருட்களில் இருந்து கிடைப்பவை – கனிம அமிலங்கள்

💠கனிம அமிலங்கள் – ஹைட்ரோ குளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம், சல்ஃப்யூரிக் அமிலம்

💠தாவரங்கள், விலங்குகள் இருந்து பெறப்படுவது – கரிம அமிலம்

💠கரிம அமிலங்கள் சில – சிட்ரிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம், மாலிக் அமிலம் (தாவரங்கள் இருந்து கிடைப்பவை), பியூட்ரிக் அமிலம், லாக்டிக் அமிலம், பார்மிக் அமிலம் (விலங்குகள் இருந்து கிடைப்பவை)

💠அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்

💠அமிலம் பினாப்தலினுடன் வினை புரிந்து – நிறங்கள் ஏதும் கொடுப்பதில்லை 💠அமிலம் மெத்தில் ஆரஞ்சுடன் வினை புரிந்து இளஞ்சிவப்பு நிறத்தை தருகிறது.

💐அமிலங்களுக்கு சிறந்த எடுத்துகாட்டுகள்:
💠ஆப்பிள் – மாலிக் அமிலம்
💠தக்காளி – ஆக்சாலிக் அமிலம்
💠திராட்சை – டாட்டாரிக் அமிலம்
💠எலுமிச்சை – சிட்ரிக் அமிலம்
💠பால்/தயிர் – லாக்டிக் அமிலம்
💠வெண்ணெய் – பியூட்ரிக் அமிலம்
💠வினிகர் – அசிட்டிக் அமிலம்
💠கொழுப்பு – ஸ்டெர்ரிக் அமிலம்
💠எறும்பு கொடுக்கு – பார்மிக் அமிலம்
💠வெங்காயம் – அனலின் அமிலம்
💠தேனீர் – டானிக் அமிலம்

💐நடுநிலை pH மதிப்பு – 7

💠pH மதிப்பு 12.0 விட அதிகமாக இருந்தால் வலிமை மிகு காரம்

💠pH மதிப்பு 3.0 விட குறைவாக இருந்தால் வலிமை மிகு அமிலம்

💠pH 7.0 விட அதிகமாக இருந்தால் வலிமை குறைந்த காரம்

💠 pH 7.0 விட குறைவாக இருந்தால் வலிமை குறைந்த அமிலம்

💐முக்கியமான சில PH மதிப்புகள் :
💠குருதி (ரத்தம்) – 7.3 – 7.5
💠உமிழ்நீர் – 6.5 – 7.5
💠சிறுநீர் – 5.5 – 7.5
💠காபி – 4.5 – 5.5
💠தக்காளி சாறு – 4.0 – 5.5
💠வினிகர் – 2.4 – 3.4
💠எலுமிச்சை சாறு – 2.2 – 2.4
💠இரைப்பை நீர் – 1.0 – 3.0
💠குளிர்பானங்கள் – 3.0
💠பால் – 6.5
💠கடல்நீர் – 8.5
💠தூய மழை நீர் – 7.0
💠அமில மழை – 5.6
💠அமோனியா – 12.0
💠மனித தோல் – 4.5 – 6.0
💠கேன்சர் செல், எனமெல் – 5.5

💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.