SI Exam 2019 – பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளின் தொகுப்பு !!

GK TNPSC

SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்

💠SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠SI வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் பொதுப்பெயர் – மியூரியாட்டிக் அமிலம்

💠மாட்டிறைச்சியிலுள்ள அமிலம் எது – ஸ்டியரிக் அமிலம்

💠நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக மாற்றுவது – அமிலம்

💠சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றுவது – காரங்கள்

💠அமிலங்கள் காரங்களுடன் வினைப்பட்டு உருவாவது – உப்பு மற்றும் நீர்

💠இரப்பரைப் பதப்படுத்த உதவும் அமிலம் – போர்மிக் அமிலம்

💠எத்திலீன் டைசயனைடை நீராற்பகுக்கக் கிடைப்பது – சக்சினிக் அமிலம்

💠டாலன்ஸ் வினைப்பொருளை ஒடுக்கும் அமிலம் – ஃபார்மிக் அமிலம்

💠வினிகரில் உள்ள அமிலம் – அசிட்டிக் அமிலம்

💠புரப்பியோனிக் அமிலத்தில் காணப்படும் மாற்றியம் – வினைச் செயல் தொகுதி மாற்றியம் 💠ஆப்பிளில் உள்ள அமிலம் எது – மாலிக் அமிலம்

💠சிறுநீரக புரைதடுப்பானாக பயன்படுவது – பென்சோயிக் அமிலம்

💠இங்க் மற்றும் உலோகப் பூச்சு தயாரிக்கப்படுவது – ஆக்ஸாலிக் அமிலம்

💠பித்தநீரில் உள்ள அமிலம் – கோலிக் அமிலம்

💠வேதிப்பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படுவது – கந்தக அமிலம்

💠சிறுநீரில் காணப்படும் அமிலம் எது – யூரிக் அமிலம்

💠சோளப்பூவை தேசிய மலராகக் கொண்ட நாடு – ஜெர்மனி

💠வெய்லிங் சுவர் எங்கு உள்ளது -ஜெருசலம்

💠முதல் புத்த சமய மாநாட்டினை கூட்டியவர் -அஜாத்சத்ரு

💠ரப்பர் பயிரிடுவதற்கு எற்ற வெப்பநிலை -35 டிகிரி 💠கோடர்களின் பூர்விகப் பகுதி – கோத்தகிரி

💠கவான்சா என்பது எந்த நாட்டின் நாணயம் – அங்கோலா

💠தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ

💠லைசோசோமை கொண்ட சுரப்பு நீர்-கண்ணீர்

💠இத்தாலியில் பாசிச கொள்கை தோன்றிய ஆண்டு -1919

💠தோலின் நிறத்துக்கான் காரணி எது – மெலானின்

💠20 வயதான ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர்.

💠வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் -149,000 கிலோமீட்டர்.

💠ரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்

💠பறவைகளில் காணப்படும் இதயத்தின் அமைப்பு – நான்கு அறை இதயம்

💠கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்

💠தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு - வெலாமன்

💠மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்

💠மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது - தட்டைப்புழு

💠குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா

💠சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.

💠கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.

💠புரோடிஸ்ட்டா உலகத்தில் ஒரு செல்லால் ஆன யூகேரியாட்டுகள் அடங்கும்.

💠அதிநுண்ணுயிரிகள் என அழைக்கப்படுவது எது - புரோடிஸ்ட்டா

💠HIV - யைக் கட்டுப்படுத்தும் மருந்து - ஆண்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகள்

💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.