TET Exam 2019 : பொது அறிவு – முக்கிய வினா விடைகள் – 06 !!

GK TNPSC

ஆசிரியர் தகுதித் தேர்வு – பொது அறிவு முக்கிய வினா விடைகள் – 06

💠அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠 தனிமங்களின் அணுநிறைகளின் அடிப்படையில் மும்மை விதியை கூறியவர் யார்? – டோபனர்

💠 ஓர் அணுவின் ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும் எலக்ட்ரான்களின் அதிகபட்ச எண்ணிக்கை –2n2

💠 6C12, 6C14 என்பது எதற்கு உதாரணமாகும்? –ஐசோடோப்பு

💠 ஹைட்ரஜனின் ஐசோடோப்பு எது? – புரோட்டியம், டியூட்ரியம், டிரிட்டியம்

💠 புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் ஐசோடோப்பு – கோபால்ட் – 60

💠 முன் கழுத்துக் கழலை நோயை குணப்படுத்த உதவும் ஐசோடோப்பு – அயோடின் 131

💠 இரத்த சோகையை நீக்கப் பயன்படும் ஐசோடோப்பு – இரும்பு 59

💠 தற்போது நடைமுறையிலுள்ள நவீன ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கியவர் யார்? – மெண்டலீப்

💠 தனிமங்களின் எண்ம விதி யாரால் வெளியிடப்பட்டது? –நியூலண்ட் 💠 ஈகா அலுமினியம் என்றழைக்கப்பட்ட தனிமம் – கேலியம்

💠 ஈகா போரான் என்றழைக்கப்பட்ட தனிமம் – ஸ்கேன்டியம்

💠 ஈகா சிலிக்கான் என்றழைக்கப்பட்ட தனிமம் – ஜெர்மானியம்

💠 மின்சாரத்தையும், வெப்பத்தையும் கடத்தும் அலோகம் – கிராபைட்

💠 மிகக் குறைந்த எடை கொண்ட உலோகம் எது? – லித்தியம்

💠 மிகவும் அதிகமான எடையுடைய உலோகம் எது? – ஆஸ்மியம்

💠 மினாமிட்டா நோய் என்பது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது? – மனநிலை பாதிப்பு

💠 ஒலியை அளக்க பயன்படும் அலகு எது? – டெசிபெல் 💠 ஒரு மனிதன் சாதாரணமாக பேசும் போது ஏற்படும் ஒலிச் செறிவு – 60db

💠 நியூட்ரானைக் கண்டுபிடித்தவர் யார்? – சாட்விக்

💠 நீரில் மிதக்கும் எண்ணெய் கசிவை அகற்ற உயிரிய தீர்வாக பயன்படுவது? – சூடோமோனாஸ்

💠 பதங்கமாகும் இயல்புடையது எது? – கற்பூரம், நாப்தலீன், அயோடின்

💠 நாணயம் என்பது எந்த கலவைக்கு உதாரணம் – திண்மத்தில் திண்மம்

💠 சோடாபானம் என்பது எவ்வகை கலவையால் ஆனது? – நீர்மத்தில் வாயு

💠 நீர்மக் காற்றின் கொதிநிலை – -196°C முதல் -183°C வரை

💠 நாம் சுவாசிக்கும் போது வெளியிடப்படும் காற்றில் ஆக்ஸிஜன் எத்தனை சதவீதம் உள்ளது? – 16%

💠 நாம் சுவாசிக்கும் போது வெளியிடப்படும் காற்றில் நைட்ரஜன் எத்தனை சதவீதம் உள்ளது? - 78%

💠 நாம் சுவாசிக்கும் போது வெளியிடப்படும் காற்றில் கரியமிலவாயு எத்தனை சதவீதம் உள்ளது? - 4%

💠 நீரில் உள்ள தனிமங்களின் நிறை விகிதம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் முறையே - 1 : 8

💠 ஆல்பா துகள்கள் என்பது எந்த தனிமத்தின் உட்கருவைப் பெற்றுள்ளது? - ஹீலியம்

💠 அணுக்கரு இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்? -எர்னஸ்ட் ரூதர்போர்டு

☀ பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.