TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் – 06

GT TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!


💥 பிறரோடு கலந்து பேசி மகிழத் தெரியாதவர்க்கு ——- தெரியாது. – உலகியல்

💥திருவருட்பாவை இயற்றியவர் ———— இராமலிங்க அடிகளார்

💥திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை ——– 5818

💥உலகம் உருண்டை வடிவமானது எனக்கூறிய மேலைநாட்டவர் யாவர்? – நிக்கோலஸ் கிராப்ஸ் ,கலீலியோ

💥திரு + அருள் + பா – திருவருட்பா

💥தாமே ஒளிவிடக் கூடியவை ————– எனப்பட்டன – நாள்மீன்

💥இராமலிங்க அடிகளார் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூரில்_________ல் பிறந்தார். – 1823

💥இராமலிங்க அடிகளார் பெற்றோர் பெயர் – இராமையா – சின்னம்மை

💥இராமலிங்க அடிகளாரின் சிறப்புப்பெயர் – திருவருட்பிரகாச வள்ளலார்

💥திருவருட்பா, சீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் நூல்களை இயற்றியவர் – இராமலிங்க அடிகளார்

💥தமிழரின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது —————-வானியல்

💥 நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதலெழுத்தும் சேர்வதற்கு —— என்று பெயர். – புணர்ச்சி

💥 அல் + திணை என்பது ———— எனப் புணரும். – அஃறிணை

💥 தோன்றல், திரிதல், கெடுதல் என்பன ———— புணர்ச்சி ஆகும் – விகாரப்

💥 வாழை + தோட்டம் என்பது ———— புணர்ச்சி – விகாரப்புணர்ச்சி

💥 நிலைமொழியும்,வருமொழியும் எவ்வித மாற்றமும் இல்லாமல் புணர்வது ———- இயல்புப்புணர்ச்சி

💥 விகாரப்புணர்ச்சி ————— வகைப்படும். –மூன்று

💥 விகாரப் புணர்ச்சி மூவகைப்படும் அவை யாவை? – தோன்றல், திரிதல், கெடுதல்

💥 உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது ——- நாடகம்.

💥 அறிவியல் கல்வியில் மிகத் தொன்மையானது எது? – ஊசல் விதி

💥 “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் ‟ எனக் கூறியவர் யார்? – திருவள்ளுவர்

💥 ஞாயிற்றின் பல பெயர்கள் யாவை? – சூரியன், கதிரவன், பரிதி, ரவி, பகலோன், திவாகரன், விகத்தன், சுடரோன், ஆதவன், பங்கயன்.

💥 மதி என்னும் சொல்லுக்கு இரு பொருள்தருக. – அறிவு, நிலவு

💥 வில்லிபாரதத்தைப் பாடியவர் ——– வில்லிபுத்தூரார்.

💥 திருவள்ளுவரின் பெற்றோர் யாவர் – ஆதி, பகவன்

💥 திருவள்ளுவரின் பிறந்த ஊர் – மயிலாப்பூர்

💥 திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் – சமண சமயத்தைச் சேர்ந்தவர்

💥 கன்னியாகுமரியில் உள்ள சிலையின் உயரம் என்ன? – 133 அடி

💥 வேறு பெயர்கள் : தெய்வப்புலவர், பொய்யில்புலவர், முதற்பாவலர், தேவர், செந்நாதப்போதகர், நாயனார், நான்முகனார், மாதானுபங்கி, தமிழ் மாமுனி, பெருநாவலர்

💥 தமிழ் மாதின் இனிய உயிர் நிலை என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் எது? – திருக்குறள்

💥 திருக்குறள் ஏழு சீர்களை கொண்ட எத்தனை வெண்பாக்களால் ஆனது? – ஈரடி

💥 ———-என்பது குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் ஆகுபெயர்- குறள்

💥 தமிழில் வழங்கும் பதினெண் கீழ் கணக்குகளுள் ஒன்று – திருக்குறள்

💥 திருக்குறள் எத்தனை உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது? – 107

💥 தமிழுக்குக்கதி என்று கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் புகழ்தவர் யார்? - செல்வக் கேசவராய முதலியார்

💥 திருக்குறளில் இடம்பெறாத தமிழ் சொற்கள் யாவை? - கடவுள், தமிழ்,ஒன்பது

💥 திருக்குறளில் இருமுறை வரும் அதிகாரம் தலைப்பு எது? - குறிப்பறிதல்

💥 திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்? - மணக்குடவர்

💥 திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் மிகச் சிறந்த உரை எழுதியவர் யார்? - பரிமேலழகர்

💥 திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தவர் யார்? - காளமேகப் புலவர்

💥 'நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன்' என்று கூறியவர்? - ரசூல் கம்சதேவ்

💥 “அறம் பெருகும் தமிழ் படித்தால், அகத்தில் ஒளி பெருகும், திறம்பெருகும் உரம் பெருகும், தீமைக் கெதிர்நிற்கும்” என்று கூறியவர்? - பெருஞ்சித்திரனார்

💥 வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி எது? - தமிழ்

💥 தமிழ் பிறமொழி துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர் யார்? - கால்டுவெல்