TET Exam 2019 : பொது அறிவு – முக்கிய வினா விடைகள் – 04 !!

GK TNPSC

ஆசிரியர் தகுதித் தேர்வு – பொது அறிவு முக்கிய வினா விடைகள் – 04

💠அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠 எந்த உயிரி அமினோ டெலிஸம் கழிவு நீக்க வகையை சார்ந்தது? – தவளையின் தலைப்பிரட்டை, டிலியாஸ்ட் மீன், நீர்வாழ் பூச்சிகள்

💠 சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அடிப்படை அலகாக உள்ளது எது? –நெஃப்ரான்

💠 மனிதனின் வாயில் எத்தனை ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன? – 3

💠 உப்பு கரைசலில் அவரை விதையை ஊற வைக்கும் போது ஏற்படும் மாற்றம் எந்த நிகழ்வை சார்ந்தது? – பிளாஸ்மேலைசிஸ்

💠 செல்லின் ஆற்றல் நாணயம் என்றழைக்கப்படுவது எது? – ATP

💠 ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவர பாகத்தின் இயக்கம் என்ன? – ஒளிசார்பசைவு

💠 தாவரத்தின் தரைமேல் பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுகிறது – நீராவி போக்கு

💠 எந்த தாவரம் ஒட்டுண்ணியாக வாழ்கிறது? – கஸ்கியூட்டா

💠 தாவர செல் இதனைப் பெற்றுள்ளதால் விலங்கு செல்லிலிருந்து வேறுபடுகிறது –செல்சுவர் 💠 ஒளிச்சேர்க்கையின் ஒளிவினை நடைபெறும் பகுதி எது? – கிரானா

💠 எந்த தாவரம் ஹாஸ்டோரியம் என்ற உறிஞ்சும் வேர்களைக் கொண்டுள்ளது? – கஸ்கியூட்டா

💠 மாதவிடாய் நிலையின் முடிவில் கருப்பையில் கார்பஸ் லூட்டியமானது ஒரு வடுவாக காணப்படுகிறது. அந்த அமைப்பின் பெயர் என்ன? – கார்ப்பஸ் ஆல்பிக்கன்ஸ்

💠 விந்துவை சேமிக்கும் வங்கியில் விந்துவை சேமிக்க திரவமாக பயன்படுத்தப்படுகிறது? – நைட்ரஜன்

💠 விலங்குகளில் எந்த பாலூட்டி விலங்கு முட்டையிடும் திறனுடையது? – பிளாட்டிபஸ்

💠 மிக மெதுவாக நகரும் திறனுடைய பாலூட்டி எது? – பிக் மிஸ்ரு

💠 உலகிலேயே மிகவும் அதிக நச்சுத் தன்மையுடைய மீன் எது? – கல் மீன்

💠 ஒட்டகச் சிவிங்கி விலங்கின் கழுத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை- 7 💠 செல்லின் ஆற்றல் நிலையம் என்றழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு – மைட்டோகாண்ட்ரியா

💠 பொருட்கள் திரவ வடிவில் உட்கொள்ளப்படுவது ……… – பினோசைட்டோசிஸ்

💠 மினாமிட்டா நோய் முதன்முதலில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது? – ஜப்பான்

💠 ஃபேகோ சைட்டோசிஸ் எனப்படுவது எது? – செல் விழுங்குதல்

💠 எந்த நிலை செல் பிரிதலின் இடைநிலை எனப்படுகிறது? – G1– நிலை, G2– நிலை, S- நிலை

💠 செல்லின் நுண்ணுறுப்புகளில் எந்த நுண்ணுறுப்பை செல்லின் துப்புரவாளர்கள் என்கிறோம்? – லைசோசோம்

💠 DNAவில் காணப்படும் பொருள் எது? – சைட்டோசின், தையமின், அடினைன்

💠 மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படும் பகுதிப் பொருட்கள் எவை? – DNA, புரதம், கொழுப்பு

💠 செல் நுண்ணுறுப்புகளில் எவற்றில் கிறிஸ்டே மடிப்பு காணப்படுகிறது? - மைட்டோகாண்ட்ரியா

💠 புரோகேரியோட்டிக் செல்களில் காணப்படும் ரிபோசோம் வகை - 70 S

💠 எந்த செல் நுண்ணுறுப்புகளில் புரத சேர்க்கையில் ஈடுபடுகின்றன? - ரைபோசோம்

💠 எந்த பாக்டீரியா வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்த செய்கிறது? - ரைசோபியம்

💠 புகையில் உள்ள நச்சுப் பொருள் எது புற்றுநோயை உருவாக்கும்? -பென்சோபைரின்

☀ பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.