TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் – 05

GT TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!


💥 தொண்ணுற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர் உள்ள நூல்? – குறிஞ்சிப் பாட்டு

💥 பெயர்ச் சொல்லின் வகையறிதல். பாம்பாட்டிச்சித்தர்; குதம்பை சித்தர்; அழிகுணிச் சித்தர் என்பன எல்லாமே – காரணப் சிறப்புப்பெயர்

💥 “கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்” எனக் குறிப்பிடும் இலக்கியம் – பழமொழி நானூறு

💥“நான்மணிமாலை” என்ற சொற்டொர் குறிப்பது – முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்

💥 தமிழர்களின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக திகழும் தமிழ்க் கருவூலம்? –புறநானூறு

💥 காலங்காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விடுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் ————— எனப்படும். – வினைத் தொகை

💥 “புதிய விடியல்கள்” என்ற கவிதை நூலினை எழுதியவர் யார்? – கவிஞர் தாராபாரதி

💥 முதுமொழிக்காஞ்சி காணப்படும் திணையின் துறை – காஞ்சி

💥 சோழர்க்குரிய மாலை ————— – ஆத்திப்பூ

💥 கருவி, கருத்தா ஆகிய பொருள்களில்________ உருபுகள் வரும் – ஆல், ஆன்

💥 சேவல் என்பதன் எதிர்ப்பால் பெயர் ———–. – பேடு

💥 புதுக்கவிதை தந்தை ந.பிச்சமூர்த்தி முதல் புதுக்கவிதை – காதல்

💥 மக்களின் துயரங்களை பொதுவுடைமை சிந்தனைகளையும் தனது பாடல்களின் வழி பரவலாக்கியவர். – கல்யாண சுந்தரம்

💥 ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் ———– முடிவது சிறப்பு. – ஏகாரத்தில்

💥 மயிலுக்கு போர்வை போர்த்திய வள்ளல் ———–. – பேகன்

💥 யானையை வதம் செய்து அதன் தோலை தன் மூது உடுத்திக் கொள்ளும் ஈசனின் வடிவம் – கஜசம்ஹாரமூர்த்தி

💥 தனிப்பாடல் திரட்டு என்னும் நூலைத் தொகுத்தவர் – சந்திரசேகர கவிராசப் பண்டிதர்

💥 பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை – 6

💥 புதுக்கோட்டை சித்தன்ன வாசல் குகைக் கோயில் ஓவியங்கள் யாருடைய காலத்தில் தீட்டப்பட்டன – அவனிபசேகர ஶ்ரீ வல்லவன்

💥 பெரும்பொழுது என்பது – ஒராண்டின் ஆறு கூறுகள்

💥 அசலாம்பிகை அம்மையாரின் காந்தி புராணம் எத்தனை பாடல்களைக் கொண்டது – ஈராயிரத்து முப்பத்து நான்கு

💥 பிரபந்தம் என்று வடநூலார் கூறுவர் – சிற்றிலக்கியம்

💥 தொண்ணூற்றாறு – பிரிக்கும் முறை – தொண்ணூறு + ஆறு

💥 இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத்துறைக்கு பெருந்தொண்டு புரிந்தவர் யார்? – சங்கரதாசு சுவாமிகள்

💥 ஒட்டக்கூத்தர் செல்வாக்கோடு திகழவில்லை என்று அவையில் கூறியவர் யார்? – சோழன் இராசேந்திரன்

💥 புலவர்கள் பொருளழகும், சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணம் - அணியிலக்கணம்

💥 எந்த நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது? - இளமை, எள்ளல், மடமை, அறியாமை

💥 ஆமை வடைக்காய் அரை ஞாண் பணயம் போளிக்காகப் புத்தகப் பணயம். இப்பாடலடிகள் இடம் பெறுவது - மருமக்கள் வழி மான்மியம்

💥 பதினேழாம் நூற்றாண்டில் பிற்பகுதியில்_________ நாடகங்கள் தோன்றின? - நொண்டி

💥 பழந்தமிழரின் இலக்கண நூல் எது? - தொல்காப்பியம்

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.