TET Exam 2019 : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் – 05 !!

GT TNPSC

ஆசிரியர் தகுதித் தேர்வு – பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள் -05

💠அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். 💠கொடுக்கப்பட்டுள்ள பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠 “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” என்ற பாடலைப் பாடியவர் – பெ. சுந்தரனார்

💠 “சாதி இரண்டொழிய வேறில்லையென்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்” என்று பாடியவர் –மகாகவி பாரதியார்

💠 “மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை” என்று பாடியவர் – மதுரைக் கூடலூர் கிழார்

💠 “பண்ணினை இயற்கை வைத்த
பண்பனே போற்றி போற்றி” என்று பாடியவர் – திரு.வி.க

💠 “கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?” என்று பாடியவர் – இராமச்சந்திர கவிராயர்

💠 “தேனருவித திரைஎழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்” என்ற பாடல்களைப் பாடியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்

💠 “காயும் ஒருநாள் கனியாகும் – நம்
கனவும் ஒருநாள் நனவாகும்” என்று பாடிய கவிஞர்? – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

💠 “பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது
மிஞ்ச அதனுள் வெயில் ஒழுகும்” என்ற பாடலடிகளைப் பாடியவர் – அழகிய சொக்கநாதப்புலவர்

💠 “ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்” என்று பாடியவர் –மகாகவிபாரதி 💠 “எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்று பாடும் புலவர்? – ஒளவையார்

💠 “ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை” என்றவர்? – மதுரைக் கூடலூர் கிழார்

💠 “அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்” என்று கூறியவர்? – திருவள்ளுவர்

💠 “சாதிகள் இல்லையடி பாப்பா- குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று கூறியவர்? – பாரதியார்

💠 “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்று கூறியவர் – திருவள்ளுவர்

💠 “கள்ளவேடம் புனையாதே- பல
கங்கையில் உன்கடம் நனையாதே” என்று பாடுபவர்? – கடுவெளிச்சித்தர்

💠 “அல்லவை தேய அறம் பெருகும்” என்று கூறுபவர் – திருவள்ளுவர்

💠 “உட்கார்நண்பா நலந்தானா – நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?” என்று பாடுவது- தாராபாரதி 💠 “பண்ணில் கலந்தால் என் பாட்டில் கலந்தான் உயிரில் கலஎதான் கருணை கலந்து”என்று பாடியவர்? – இராமலிங்க அடிகள்

💠 “நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று கூறுபவர்? – மோசி கீரனார்

💠 “நீடிய பிணியால் வருந்துகின்ரோர் என்
நேர் உறக்கண்டு உளந்துடித்தேன்” என்றவர் – இராமலிங்க அடிகள்

💠 “காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்” என்று கூறுபவர்? – முடியரசன்

💠 “யான்பெற்ற பெருந்தவப்பேறு என்னை அன்றி இருநிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே” எனப் பாடியவர் – வில்லிபுத்தூரார்

💠 “தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட்கெல்லாம்
தலைவானைப் பாடுபவன் கவிஞன் வீரன்” என்பவர் – முடியரசன்

💠 “சுழன்றும் ஏர் பின்னது உலகம்” என்று பாடியவர்? – திருவள்ளுவர்

💠 “அரம்போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட்பண்பு இல்லாதவர்” எனக் கூறுபவர்? – திருவள்ளுவர்

💠 “மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்பட்டு மேல் விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்”எனப் பாடுபவர் - முடியரசன்

💠 “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடியவர் -இராமலிங்க அடிகள்

💠 “வான் பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்” எனப் பாடியவர் - வில்லிபுத்தூரார்

💠 “கனியிருப்ப காய் கவர்ந்தற்று” எனப் பாடியவர்? - திருவள்ளுவர்

💠 “பண்புடையார் பட்டுண்டு உலகம்” எனக் கூறியவர் -திருவள்ளுவர்

☀ பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.