P.F பிடிப்பு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!!!

Job Recruitment / Trend News

P.F பிடிப்பு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!!!

💥 இந்திய தொழிலாளர்களின் நலனுக்காகச் சில பல திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.

💥 அவற்றுள் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

💥 சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் பங்களிப்பாக அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஃஎப்) திட்டத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியது.

💥 1952ம் ஆண்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகளின் கீழ் வருங்கால வைப்பு நிதியை அரசு நிர்வகித்து வருகிறது. 💥 தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பி.எப்., சேமிப்பிற்காக பிடித்தம் செய்யப்படும். இதே சதவீத தொகையை நிறுவனங்களும் அளிக்கும்.

💥 சில நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்து, சிறப்பு படிகளை அதிகரித்து மோசடி செய்தன.

💥 இதன் மூலம் குறைவான தொகையை பி.எப்., பங்கிற்கு செலுத்தி வந்தன.

💥 இவற்றை தடுக்கும் விதமாக அடிப்படை சம்பளத்துடன் அனைத்து சிறப்பு படிகளையும் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டு பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

💥 இனி சிறப்பு படிகள் சேர்த்து பி.எப்., பிடிக்கப்படும். இதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.