பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு புதிய சலுகை!!!

Job Recruitment / Trend News

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு!!!

💥 தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 2017 – 18ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1 புதிய தேர்வு முறை அமலுக்கு வந்தது.

💥 இதனால், 2018ல் நடந்த தேர்வில், பிளஸ் 1 பாடத்தில் தேர்ச்சி பெறாத, 23 ஆயிரம் மாணவர்கள், பிளஸ் 2வை தொடராமல், பள்ளிகளில் இருந்து வெளியேறினர்.

💥 இந்நிலையில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல முடியும் என தமிழக பள்ளிக் கல்வி சீரமைப்புக் குழு வல்லுநர்கள் தெரிவித்தனர்.

💥 இவர்கள், பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாவிட்டாலும், அதை, அரியராக எழுதவும், பள்ளிகளுக்கு வந்து, பிளஸ் 2 படிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
💥 ஆனால், சில பள்ளிகளில், மாணவர்கள் கட்டாயமாக மாற்று சான்றிதழ் கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

💥 இதை, அரசு தேர்வு துறை கண்டுபிடித்து, அவர்கள் அனைவரையும், தேர்வுக்கு விண்ணப்பிக்க வைக்க பள்ளிகளுக்கு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால், 50 சதவீதம் பேர் வரை, பள்ளிகளுக்கு திரும்பினர்.

💥 தற்போது பள்ளிக்கு வராமலும், கட்டணம் செலுத்தாமலும், விண்ணப்பிக்காமலும் இருந்த மற்ற மாணவர்களும், தேர்வு எழுத, தேர்வு துறை அனுமதி அளித்துள்ளது.

💥 தேர்ச்சிப் பெறாத மாணவர்கள், எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதினார்களோ, அதே தேர்வு மையத்தில், அவர்களுக்கான, ஹால் டிக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளன.

💥 இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வரும் நாட்களில் மாணவர்கள், தேர்வில் பங்கேற்கலாம்.

💥 இதற்கு யாரிடமும், அனுமதி வாங்க வேண்டாம். நேரடியாக தேர்வு மையத்திற்கு சென்று, தேர்வு எழுதலாம் என தெரிவித்துள்ளனர்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.