மீண்டும் வருமா இந்தியா – பாகிஸ்தான் போர்…!

Job Recruitment / Trend News

மீண்டும் வருமா இந்தியா-பாகிஸ்தான் போர் வரலாறு!!

💥 இந்தியா, பாகிஸ்தான் இடையே ஜம்மு & காஷ்மீர் பிரச்சனை 1947ல் இருந்து நீடிக்கிறது. கடந்த 1947, அக்டோபரில் இரு நாடுகள் இடையே முதன் முறையாக போர் நடந்தது. இதை முதல் காஷ்மீர் போர் என்பர். ஐ.நா.சபை தலையீடு காரணமாக 1949, ஜனவரி. 1 நள்ளிரவில் போர் நிறுத்தப்பட்டது.

💥 பின்பு 1965-ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டது. ஆபரேஷன் ஜிப்ரால்டர் என்ற பெயரில் காஷ்மீருக்குள் ஊடுருவி, அதை கைப்பற்றும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டது.

💥 இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தது. 17 நாட்கள் நடந்த இந்த போரில், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

💥 பின்னர் காஷ்மீரை மையப்படுத்தாமல் வங்கதேச விடுதலையின் போது இந்தியா- பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு போர் நடந்தது. 11 இந்திய வான்படை முகாம்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது.

💥 பின்னர் 1999 ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகள், கார்கில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றின. இதையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தது.

💥 இரண்டு மாதங்கள் நீடித்த போரில், பாகிஸ்தான் பெரிய இழப்புகளை சந்தித்தது. கார்கில் போரில் இந்தியா பெரும் வெற்றி பெற்ற நிலையில், உலக நாடுகளின் அழுத்தத்தால், தனது படைகளை பாகிஸ்தான் திரும்பபெற்றது. 💥 4 முறையும் முதலில் தாக்குதல் நடத்தி போருக்கு காரணமான பாகிஸ்தான், அனைத்திலும் தோல்வியையே தழுவியது. போர்களை தவிர பாகிஸ்தான் ராணுவ உதவியுடன், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள், இந்தியாவில் தாக்குதல்களை அரங்கேற்றின.

💥 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 6 போலீசார் உள்பட 9 பேரை 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

💥 பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது. 

💥 இதைதொடர்ந்து 2008 ஆம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்,  சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர், 9 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

💥 2016ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி, காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ பிரிவு தலைமையகத்தில், தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 19 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

💥 11 நாட்களுக்கு பிறகு, பாகிஸ்தான் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம், தீவிரவாத முகாம்கள் மீது அதிரடியாக துல்லிய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 

💥 தற்போது அதிகாலை 3:30 மணிக்கு 12 மிராஜ் 2000 ரக இந்திய போர் விமானங்கள், குவாலியர், ஆக்ரா விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பின.

💥 3:35 மணிக்கு விமானங்கள் எல்லைக் கோட்டை கடந்தன. 3:45-3: 53 மணி வரை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் பயங்கரவாத முகாம் தாக்கப்பட்டது.

💥 3:48-3:55 மணி வரை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 24 கி.மீ., வடமேற்கு பகுதியில் உள்ள முசாபராபாத் முகாம் தாக்கப்பட்டது.

💥 3:58-4:06 மணிக்கு சகோட்டி பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம் தாக்கப்பட்டது. 3:45 மணிக்கு துவங்கி, 21 நிமிடம் நடந்த தாக்குதல் 4:06 மணிக்கு முடிவுக்கு வந்தது.

💥 1000 கி.கி., வெடி பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டன. காலை 5:00 மணிக்கு இந்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் 'டுவிட்டர்' செய்தி வெளியிட்டது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.