மார்ச் 1 முதல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை!!!

Uncategorized

மார்ச் 1 முதல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை!!!!!

💥 தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

💥 நடப்பு கல்வி ஆண்டில் மார்ச் 1ல் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.

💥 இதையடுத்து, தேர்வு விதிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. 💥 இந்நிலையில் அரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மார்ச் 1 முதல், விடுமுறை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.

💥 அனைத்து பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், பொது தேர்வு கண்காணிப்பு, ஏற்பாடு பணிகளில் ஈடுபட வேண்டும்.

💥 தேர்வு பணியை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தற்செயல் விடுப்பு, அவசர விடுப்பு போன்றவற்றை எடுக்கக் கூடாது.

💥 மார்ச் 1 முதல் தேர்வு பணி முடியும் வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

💥 மருத்துவ விடுப்பு என்ற பெயரில் போலியான காரணங்கள் கூறி கடிதம் எடுத்து வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.