குரூப் – 2 தேர்வில் விடை தாள் மாற்றம்!!!

Job Recruitment / Trend News TNPSC

குரூப் – 2 தேர்வில் விடை தாள் மாற்றம் TNPSC அறிவிப்பு!!!

💥 குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான விடைத் தாளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது.

💥 குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள பல்வேறு பதவியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் கடந்த டிசம்பர் 17-இல் வெளியிடப்பட்டன.

💥 தற்போது முதன்மை எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

💥விவரித்து விடை எழுதும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு விடைத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

💥 இதுவரை முதன்மை எழுத்துத் தேர்வுக்கு கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவை தனித்தனியே வழங்கப்பட்டன.


💥 இந்த நிலையில், தற்போது நடைபெறவுள்ள முதன்மை எழுத்துத் தேர்வுக்கு கேள்வி மற்றும் விடைத்தாள் இரண்டும் ஒருங்கிணைந்த ஒரே விடைப் புத்தகமாக வழங்கப்பட உள்ளது.

💥 இந்த விடை புத்தகத்தில் ஒவ்வொரு கேள்வியும் தனித்தனியே அச்சிடப்பட்டு அந்தக் கேள்வியின் கீழே விடையளிப்பதற்கான போதிய இடமும் வழங்கப்பட்டிருக்கும்.

💥 தேர்வு எழுதுபவர்கள் அந்தந்த கேள்விக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விடையளிக்க வேண்டும்.

💥 விடையளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைத் தவிர மற்ற இடங்களில் எழுதப்படும் விடைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

💥 எனவே, தேர்வு எழுதுபவர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விடையளிக்க வேண்டும் என்பதால் விடையளிக்கும் போது மிகுந்த கவனத்துடன் விடையளிக்க வேண்டும்.

💥 தேர்வு முடிந்த சில நாட்களில் தேர்வின் வினா விடைப் புத்தகத்தின் மாதிரி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி.அறிவித்துள்ளது.


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.