இனி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு..!

Job Recruitment / Trend News

5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு..பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!!!

💥 நாடு முழுதும் 1ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது.

💥 இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. அதனால் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தெரிவித்து வந்தது.

💥 சமீபத்தில் பள்ளி கல்வி துறை சார்பில், சென்னையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர்களுக்கு கூட்டம் நடந்தது.


💥 இதில் இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது.

💥 இதையடுத்து மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழகத்தில் இந்தப் பொதுத்தேர்வு முறை அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தது.


💥 அதன்படி பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

💥 இந்த ஆண்டு முதல் மத்திய அரசின் அறிவுறுத்தல் படி 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுநடத்தபடும் என்று தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.