புதியப் பாடப்பகுதி – 6ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – முதல் பருவம் முக்கிய குறிப்புகள்!!!

GT TNPSC

புதியப் பாடப்பகுதி 6 ஆம் வகுப்பு இன்பத்தமிழ்!!!


💥 தாய்மொழியைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன.

💥 தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது.

💥 பாரதிதாசன் தமிழைப் பல விதங்களில் போற்றுகிறார் .

💥 கண்ணே மணியே என்று குழந்தையைக் கொஞ்சுவது உண்டு.

💥 அதுபோல அவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டியுள்ளார். அதை என்னவென்று தெரிந்துகொள்வோம்.

💥 தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

பாடலின் பொருள்

💥 அமுதம் மிக இனிமையானது. அது போலவே தமிழும் இனிமையானது. அத்தகைய இன்பம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது.

💥 தமிழுக்கு நிலவென்றும் பெயர் . இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.

💥 தமிழுக்கு மணம் என்றும் பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும்.

💥 தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.

💥 தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது.

💥 தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.


பாரதிதாசன்

💥 பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.

💥 பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

💥 தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் பாடியுள்ளார்.

💥 எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். இவரைப் பாவேந்தர் என்றும் போற்றுவர்.


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.