TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 11) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 அருணாசலப் பிரதேசத்தில் ரூ.4,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 🌀 மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி “இந்திய அளவுத்” திட்டத்தை, மும்பையில் தொடங்கி வைத்தார்.

🌀 ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் குழந்தைகளுக்காக, ராஜீவ் காந்தி எதிர்கால வாழ்க்கைக்கான தளத்தை, ராஜஸ்தான் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெடங்கி வைத்தார்.

🌀 கேரள மாநில அரசு பிரவசி பங்காதய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

🌀 சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களிடையே, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் நோயின் ஆரம்பகால நிலை பற்றிய அறிதலை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக, “சுவஸ்த் நாரி – சக்தி ஹமாரி” என்ற பிரச்சாரத்தை இந்திய புற்றுநோய் சமூகம் (Indian Cancer Society) தொடங்கியுள்ளது.

🌀 இந்தியா மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கிடையே, நீலப்பொருளாதார வளர்ச்சியில் ஒத்துழைப்பை வழங்குவதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

🌀 இந்திய தேர்தல் ஆணையமானது, குடிமக்களுக்கு தங்கள் விவரங்களை சரிபார்க்கவும், விவரங்களை மாற்றவும், புதுப்பிப்பதற்காகவும் மற்றும் திருத்தங்களை மாற்றவும் “வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம்” ஒன்றை தொடங்கியுள்ளது.

🌀 ஜம்மு & காஷ்மீர் மாநில அரசானது, லடாக் பகுதியின் நிர்வாக/வருவாய் பிரிவை, மாநிலத்தின் மூன்றாவது நிர்வாகப் பிரிவாக அறிவித்துள்ளது.

🌀 ஹங்கேரி நாட்டில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெறும் பெண்களுக்கு, வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என, பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார்.

🌀 2019 ஆம் ஆண்டின் மகாராஷ்டிராவின் கொல்ஹாபூரில், 8 நாட்கள் நடைபெறும் கொல்ஹாபூர் சர்வதேசத் திரைப்படத் திருவிழாவின், 7வது பதிப்பு தொடங்கியது.
🌀 கோவாவின் பனாஜியில் கோவா பொழுதுபோக்கு சமூக நலக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவா அரசால் ஏஜிஸ் கிரஹாம் பெல் விருதின் 9-வது பதிப்பிற்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

🌀 ‘பாப்தா’ எனப்படும், பிரிட்டன் அகாடமி என்ற அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும், சிறந்த திரைப்படத்திற்கான விருதை, ரோமா பெற்றுள்ளது. தி பேவரைட் திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த பிரிட்டன் திரைப்படம் உள்ளிட்ட ஏழு விருதுகளை பெற்றுள்ளது.

🌀 தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பாலாஜி, ராஜாராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🌀 சர்வதேச ஏடிபி தரவரிசையில் முதல் 100 இடங்களில் நுழைந்த மூன்றாவது இந்திய டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார், சென்னையின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன். தற்போது அவர் 97-ஆம் இடத்தில் உள்ளார்.

🌀 எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் தங்களது அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கான, PETRO TECH – மாநாட்டின் 13வது பதிப்பு உத்திரப் பிரதேச மாநிலத்தின் கிரெட்டர் நொய்டாவில் நடைபெற்றது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.