TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 10) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 உழவன் செயலியில் நியாயமான விலையில் விவசாய உபகரணங்களை விவசாயிகள் பெறுவதற்காக, “JFarm” என்ற புதிய சேவையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 🌀 சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நிலையங்களில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

🌀 மகாராஷ்டிரா மாநில அரசானது அம்மாநிலத்தில் பழங்குடியினருக்காக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு திட்டங்களை சீராய்வதற்காக, “விவேக் பண்டிட்” என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.

🌀 ஐக்கிய நாடுகளின் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின்” கீழ், “வன விலங்குகளில் புலம் பெயர்ந்த இனங்களை (CMS) பாதுகாப்பதற்கான மாநாட்டின்” 13வது பதிப்பை, இந்தியாவானது, 2020-ம் ஆண்டு, பிப்ரவரி 15 முதல் 22 வரை காந்திநகரில் (குஜராத்) நடத்த உள்ளது.

🌀 நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பின் 30-வது உறுப்பினராக, “மாசிடோனியா” இணைந்துள்ளது.

🌀 பெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதன் மூலம், அவர்களது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்வதற்கான இரண்டு திட்டங்களை அமெரிக்காவானது இந்தியாவில் செயல்படுத்த உள்ளது.

🌀 வளைகுடா நாடான, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகர் அபுதாபியில் உள்ள நீதிமன்றங்களில், ஹிந்தி, ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🌀 தீன்தயாள் உபாத்யாய – தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் வரம்பை, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நீட்டிக்க, மத்திய நகர்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் ‘சஹரி சம்ரிதி உத்சவ்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

🌀 அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பதற்கான “Parmanu Tech” என்னும் மாநாடு, புதுடெல்லியில் நடைபெற்றது.

🌀 உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் என்றழைக்கப்படும், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தினை பிரபலபடுத்துவதற்காக, புதுடெல்லியில், PM-JAY என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது.

🌀 இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில், முதலாவது நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

🌀 சிறுபான்மையினர் நல ஆணைய அமைச்சகத்தின் புதிய செயலாளராக, ஸ்ரீ சைலேஷ் (Sri Sailesh) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

🌀 இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு (UK) இடையேயான உறவை மேம்படுத்துவதில், தன்னுடைய பங்கை செலுத்தியதற்காக, எஸ்பிஐ வங்கியின் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பிராந்திய தலைமையக வங்கிக்கு “இலண்டன் நகரத்தின் சுதந்திரம்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.