TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 09) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil
🌀 டெல்லி அரசாங்கம் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் நோக்கத்துடன், சுழிய இறப்புப் பெருவழிப்பாதையைத் தொடங்கியுள்ளது. 🌀 சீன புத்தாண்டின் 2019-ஆம் ஆண்டிற்கான சின்னமாக பன்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

🌀 தாய்லாந்து நாட்டின் நீர்வாழ் விலங்காக ‘சியாமீஸ் சண்டையிடும் மீன்’ என்ற இனத்தை அறிவிப்பதற்காக, ஒப்புதல் வழங்கப்பட்டது.

🌀 இந்திய அணி விக்கெட் கீப்பர் எம்.எஸ்.டோனி, 300 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

🌀 டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) ‘உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்புகள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது.

🌀 இந்தியா மற்றும் பூடான் ஆகிய இருநாடுகளுக்கிடையே, ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை முறைப்படுத்தியதற்காக, 50 வருடங்களைக் குறிப்பிடும் வகையில், புதுதில்லியில் 8-வது நூற்றாண்டில் வசித்த, இமாலயத் துறவியான குரு பத்மசம்பவா மீதான இரண்டு நாள் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.

🌀 நிர்மலா சீத்தாராமன் தலைமையிலான, பாதுகாப்பு கொள்முதல் குழு மிலன் 2T – என்ற பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

🌀 மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் கூகுள் நிறுவனத்துடனும் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுடனும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
🌀 இந்தியாவின் மிகப்பெரிய பன்முக கலாச்சராத் தன்மை கொண்ட வீதித் திருவிழாவான, காலா கோடா விழா மும்பையில் தொடங்கியது.

🌀 அமெரிக்க தொழில் மற்றும் வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ள, உலகின் முதல் 50 பொருளாதாரங்களுக்கான வருடாந்திர சர்வதேச IP குறியீட்டில், இந்தியா 44-வது இடத்திலிருந்து 8 இடங்கள் முன்னேறி 36-வது இடத்தில் உள்ளது.

🌀 சர்வதேச இசைக்கான 61-வது கிராமி விருதுகள், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வழங்கப்பட்டன. பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

🌀 திருக்குறளின் புகழை உலகமெல்லாம் பரப்பி வரும் பாஜக மாநிலங்களவை முன்னாள் எம்பியும், திருவள்ளுவருக்கான மாணவர்கள், இளைஞர்கள் அமைப்பின் தலைவருமான தருண் விஜய்க்கு, “திருக்குறளின் போர்வாள்’ விருது வழங்கப்பட்டுள்ளது.