தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்து!!!

Job Recruitment / Trend News

தமிழகத்தில் ஒரே கட்டமாக மார்ச் 10 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்..!

💥 தமிழகம் முழுவதும் மார்ச் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

💥 குழந்தைகளை இளம்பிள்ளை வாதம் எனப்படும் கை, கால்களை முடமாக்கும் நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருவது வழக்கம்.

💥 தற்போது இந்தியாவில் 4 ஆண்டுகளாகவும், தமிழகத்தில் 14 ஆண்டுகளாகவும் போலியோ இல்லை என ஆய்வு தெரிவித்துள்ளது.

💥 தமிழகத்தில் ஜனவரி மாதம் இறுதியிலும் பிப்ரவரி மாதத்திலும் 2 கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

💥 ஆனால், போலியோ சொட்டு மருந்து தேவையான அளவில் இல்லாததால், முகாம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

💥 தற்போது தமிழகம் முழுவதும் மார்ச் 10-ம் தேதி ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.